உண்மைகள்

மறைக்கப்படும் மறுக்கப்படும் செய்திகளுக்காக...

Get The Latest News

Sign up to receive latest news

2/15/2015

| |

.மடக்குவாரா மைத்திரி -சிஹல ராவய

sihalaபலாங்கொட குருகல பகுதியின் 52 ஏக்கர் காணியில் வசிக்கும் சட்டவிரோத குடியேற்றக்காரர்களை அகற்றாது போனால், தற்கொலை செய்துக்கொள்ளப் போவதாக சிஹல ராவய அச்சுறுத்தல் விடுத்துள்ளது.
சிஹல ராவயவின் தேசிய அமைப்பாளர் அக்மீமன தயாரட்ன தேரர் இந்த அச்சுறுத்தலை விடுத்துள்ளார்
ஏற்கனவே இந்த பகுதியில் இருந்த சட்டவிரோத குடியேற்றக்காரர்களை முன்னைய அரசாங்கம் அகற்றியிருந்தது. எனினும் தற்போதைய அரசாங்கம் மீண்டும் அவர்களை குடியேற அனுமதித்திருக்கிறது.
இந்தநிலையில் இன்னும் ஒரு வாரத்துக்குள் இந்தப்பிரச்சினைக்கு தீர்வு எட்டப்பட வேண்டும். இல்லையேல் பிரச்சினையை தமது கைக்குள் கொண்டு வரப்போவதாக தேரர் எச்சரித்துள்ளார்.
இதேவேளை அரசாங்கத்துக்குள் இருக்கும் ஜாதிக ஹெல உறுமயவும் இந்த விடயத்தில் மௌனமாக இருப்பதாக தேரர் குற்றம் சுமத்தியுள்ளார்.
குருகல பகுதியில் குடியேறியுள்ள முஸ்லிம்களே சட்டவிரோத குடியேறிகள் என்று சிஹல ராவய குறிப்பிட்டுள்ளது.