உண்மைகள்

மறைக்கப்படும் மறுக்கப்படும் செய்திகளுக்காக...

Get The Latest News

Sign up to receive latest news

2/11/2015

| |

தேசிய நிறைவேற்றுப் பேரவையில் அங்கம் வகிக்க முடியுமாயின் ஏன் அமைச்சுப் பதவியை பெற்றுக்கொள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் முடியாது

Résultat de recherche d'images pour "முரளீதரன் எனப்படும் கருணா"நாட்டில் சமாதானத்தை ஏற்படுத்த அர்ப்பணிப்புடன் செயற்பட்டதாக முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளீதரன் எனப்படும் கருணா தெரிவித்துள்ளார்.
இந்த நாட்டில் சமாதானத்தை நிலைநாட்ட கடுமையாக பாடுபட்டவர்களில் நானும் ஒருவன்.
ஆளும் கட்சியோ அல்லது எதிர்க்கட்சியோ வன்முறைகளைத் தூண்ட அனுமதிக்க முடியாது.
ஜனாதிபதி தேர்தல் காலத்தில் மிகவும் நாகரீகமான முறையில் பிரச்சாரங்களில் ஈடுபட்டிருந்தேன்.
எந்தவிதமான வன்முறைச் சம்பவங்களும் இடம்பெறவில்லை.
எந்தவொரு கட்சி ஆட்சிக்கு வந்தாலும் பழிவாங்கும் எண்ணத்துடன் செயற்படுகின்றனர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அடியாட்கள் மட்டக்களப்பில் மக்களின் வீடுகள் மீது கல் வீசி தாக்குதல் நடத்தியிருந்தனர்.
அன்றைய அரசாங்கத்துடன் நாடடி;ல் சமாதானத்தை நிலைநாட்ட அர்ப்பணிப்புடன் செயற்பட்டதனை அனைவரும் அறிவார்கள்.
நாம் சமாதானத்தைப் பெற்றுக்கொண்டதனால் இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் அரசியல் செய்ய முடிகின்றது.
கிழக்கு மாகாணசபையில் தமிழர் ஒருவருக்கு அமைச்சுப் பதவி கூட வழங்கப்படவில்லை.
தேசிய நிறைவேற்றுப் பேரவையில் அங்கம் வகிக்க முடியுமாயின் ஏன் அமைச்சுப் பதவியை பெற்றுக்கொள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் முடியாது.
புதிய பாதுகாப்பு அமைச்சர் ஆர்வத்துடன் கடமையாற்றி வருகின்றார், அவரது செயற்பாடுகளை நான் பாராட்டுகின்றேன் என கருணா நாடாளுமன்றில் நேற்று தெரிவித்துள்ளார்.