2/11/2015

| |

கிழக்கு பட்ஜட் ஏகமனதாக நிறைவேற்றம்

கிழக்கு மாகாண சபையின் 2015 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் ஏகமன தாக நிறைவேற்றப்பட்டு ள்ளது.கிழக்கு மாகாண சபை அமர்வு நேற்று செவ்வாய்க் கிழமை காலை 9.30 மணியளவில் தவிசாளர் ஆரியவதி கலப்பதி தலை மையில் ஆரம்பமானது.
இதன்போது புதிய முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமதினால் வரவு செலவுத் திட்டம் சமர்பிக் கப்பட்டதுடன் அனைத்து உறுப்பினர்களும் ஆதரிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார்.
இதனைத் தொடர்ந்து உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் தண்டாயுதபாணி இவ்வரவு செலவுத் திட்டத்தை தமது கட்சி ஆதரிப்பதாகத் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து வரவு செலவுத் திட்டம் ஏகமனதாக நிறைவேற்றப் பட்டது. இதன்போது இரண்டு உறுப்பினர்கள் மாத்திரம் சபைக்கு சமுகமளிக்கவில்லை.
இதன் பிரகாரம் இவ்வரவு செலவுத் திட்டத்திற்கு ஆளும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி என்பவற்றுடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஐக்கிய தேசியக் கட்சி என்பனவும் ஆதரவளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கடந்த டிசம்பர் மாதம் அப்போதைய முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீதினால் சமர்ப்பிக்கப்பட்ட கிழக்கு மாகாண சபையின் 2015 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் வாக்கெடுப்பு நடத்தப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் கடந்த ஜனவரி மாதம் இரண்டு தடவைகள் சபை ஒத்திவைக்கப்பட்டதால் அவ்வரவு செலவுத் திட்டம் நிறை வேற்றப்படாமல் இருந்து வந்தது.