2/08/2015

| |

"சுதந்திரதின கொண்டாட்டத்தில் கூட்டமைப்பு பங்கேற்றிருக்க வேண்டும்"

இலங்கையின் சுதந்திரதின கொண்டாட்டத்தை பகிஷ்கரிக்காது கூட்டமைப்பில் உள்ள அனைவரும் பங்குபற்றி இருக்க வேண்டும் என்று தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், நல்லாட்சியைக் கட்டி எழுப்புவதற்காக புதிய அரசாங்கம் 100 நாட்களை அவகாசமாகக்கோரி உள்ளது. மக்கள் எதிர்பார்க்கும் நல்லாட்சியை அமைப்பதற்காக 50 நாட்களாவது அரசாங்கத்துடன் சேர்ந்து செயற்பட வேண்டும். நல்லெண்ணத்தை உருவாக்குவதற்காக பல கட்சிகள் தமது தனிப்பட்ட கொள்கைகளை கைவிட்டு ஓரணியில் இணைந்துள்ளன. தமிழ்த்தேசியக்கூட்டமைப்பில் உள்ள சிலர் நல்லாட்சியைக் குழப்புவதற்கும்  பிரச்சினையை உருவாக்கவும் முயற்சி செய்கின்றனர். சுதந்திர தின வைபவத்தில் கலந்து கொண்டதன் மூலம் நல்லெண்ணம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. சில விடயங்களை சாணக்கியத்துடன் கையாள வேன்டும். கூட்டமைப்பில் உள்ள சிலர் மக்கள் மத்தியில் குழப்பத்தி ஏற்படுத்துகிறார்கள். அவர்கள் அமையாக இருப்பது நன்மையளிக்கும் என்றார். - See more at: http://www.tamilmirror.lk/139269#sthash.YajYaDGc.dpuf