2/18/2015

| |

பிரபாகரனை வெள்ளைக்கொடியுடன் வெளியே வரசெய்தவர் திருக்கோவிலில் மீண்டும் புலிகளுடன்

  முன்னாள் ஜனாதிபதியின் அம்பாறை மாவட்ட இணைப்பாளரும் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான கே.புஷ்பகுமார் என்றழைக்கப்படும் இனிய பாரதியின் காரியாலயம் அமைந்துள்ள வளாகத்தில் காணாமல் போன தமது உறவுகளை மீட்டுத்தருமாறு கோரி ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது.சிலபிரதேச மக்களை இணைத்துக்கொண்டு   முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்திர நேருவின் மகனான சந்திரகாந்தன் இவ்ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.  

சந்திரநேரு சந்திரகாந்தன் மற்றும் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ரி.கலையரசன் ஆகியோரின் இவ் ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடுசெய்திருந்தனர்.

இறுதிக்கட்ட யுத்தத்தின்போது பிரபாகரன் வெள்ளைக்கொடியுடன்  வெளியே வந்த செய்தி பலரும் அறிந்ததே.இதற்கு இராணுவம்  பயன்படுத்திய முகவர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்திர நேருவின் மகனான சந்திரகாந்தன் ஆகும்.இவர் தனது தகப்பனின் செல்வாக்கினால் புலிகளுக்கு விசுவாச மானவராக இருப்பார் என்று எண்ணிய புலிகள் இவரை இராணுவத்துடன் தொடர்பாட அனுமதித்தனர்.ஆனால் சந்திரகாந்தன்  இரட்டை முகவராக செயற்பட்டு  இராணுவத்துக்கு உரிய நேரத்தில் பிரபாகரனை சரணடைய வைத்தார்.இவரது மனைவி ஒரு இராணுவ கேர்ணலுடைய தங்கை  என்பதுவும் இவரது நம்பிக்கை துரோகத்துக்கு வாய்ப்பானது.இவர் எந்தவித அரசியல் பதவிகளிலும் இல்லாதபோதும் இன்றுவரை இவருக்கு இராணுவ புலனாய்வு பாதுகாப்பு வழங்கப்பட்டுவருகின்றது.இவருக்கு புலனாய்வு பிரிவினரால் வழங்கப்பட்டுள்ள கைத்துப்பாக்கியுடனேயே இவர் வலம்வருகின்றார்.கடந்த இரு வருடங்களுக்கு முன்னர் அத்துப்பாக்கியை கையாளத்தெரியாமல் தனக்குத்தானே சுட்டுக்கொண்டுகொண்டவர்  இவர் என்பதுவும் பலரும் அறிந்த செய்தியாகும். 


இவரது துரோகம் காரணமாக கடந்த மாகாண சபைத்தேர்தலில் இவருக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு வேட்பாளர் வாய்ப்பு  மறுக்கப்பட்டது. அண்மையில் வவுனியாவில் இடம்பெற்ற தமிழரசுக்கட்சியின் மாநாட்டுக்கு சென்ற இவரை மண்டப வாயிலில் வைத்தே மாவையாரல் திருப்பியனுப்பபட்டவராவர்.இப்போது அடுத்துவரும் பாராளுமன்ற தேர்தலிலாவது போட்டியிட வாய்ப்புக்கிடைக்காதா என்று ஓடித்திரியும் இவர் தன்னை ஒரு பிரபலமான மக்கள் தொண்டனாக காட்டும் போலித்தனங்களில் ஈடுபட்டுள்ளார்.அவரது முயற்சிக்கு இப்போது இவருக்கு கிடைத்திருப்பது இனியபாரதியின் பெயர்.மக்கள் விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் விசாரணைக்கும் தண்டனைக்கும் உரியவர்கள் என்பது அவசியமானது.ஆனால் இழப்புகளிலும் சோகங்களிலும் வெதும்பிக்கிடக்கும் மக்களின் துயரங்களை தத்தமது அரசியல் இலாபங்களுக்கு பயன்படுத்தமுனைபவர்கள், அல்லலுற்ற மக்களை பயன்படுத்தி தாம் அரியணையில் ஏற துடிப்பவர்கள் கேவலமானவர்கள் ஆகும்.இவரது மனித உரிமை கோஷம்  எவ்வளவு தூரம் பொய்மையானதும் சந்தர்ப்பவாதமானதும் என்பதை இவருக்குப்பின்னால் நின்று கோஷம்போடுபவர்கள் யாரென்பதை அறிந்தால் நன்றாக புரியும்.இவரது கைக்கூலிகளாக பாரதியின் வீட்டிற்க்கு கல்லேறிபவர்களாக செயல்படுபவர்கள்  புனர்வாழ்வுபெற்ற புலிகளாகும்.  இந்த  புலிகளின் கடந்த கால மிலேச்சத்தனமான நடவடிக்கைகளால் விதவைகளாகிப்போன தமிழ்பெண்கள் எத்தனைபேர்? அவர்களுக்காக இந்த சந்திரகாந்தன் ஏன்  இதுவரை குரல்கொடுக்கவில்லை? என்று திருக்கோவில் பிரதேச ஆசிரியர்  ஒருவர் எமது இணையத்தளத்துக்கு தெரிவித்தார்.