2/08/2015

| |

புகையிரதம் மோதி ஒருவர் மரணம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூருக்கும் செங்கலடிக்கும் இடைப்பட்ட புகையிரதப் பாதையில் பயணித்துக்கொண்டிருந்த  புகையிரதம்  மோதி செங்கலடியைச் சேர்ந்த சரவணபவன் சங்கீதன் (வயது 17) என்ற சிறுவன் மரணமடைந்ததுடன், மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளதாக  ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.   சனிக்கிழமை (07) மாலை  மட்டக்களப்பிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்றுகொண்டிருந்த இந்தப் புகையிரதம் ஏறாவூருக்கும் செங்கலடிக்கும் இடைப்பட்ட பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது, இந்தச் சிறுவர்கள்  இருவரும் சைக்கிளில் பாதுகாப்பற்ற புகையிரத கடவையை கடந்ததாக விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர். இதன்போதே இவர்கள் மீது புகையிரதம் மோதியுள்ளது.   இதில் காயமடைந்த இருவரும் உடனடியாக செங்கலடி  பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இதன்போது,  சரவணபவன் சங்கீதன் (வயது 17) என்ற சிறுவன்  மரணமடைந்துள்ளான்.   இதில் படுகாயமடைந்த செங்கலடியைச் சேர்ந்த மற்றைய சிறுவனான கே.பிறேமானந்த் (வயது 15)  செங்கலடி பிரதேச வைத்தியசாலையிலிருந்து  மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தச் சம்பவம் தொடர்பில் ஏறாவூர் பொலிஸார விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர். - See more at: http://www.tamilmirror.lk/139294#sthash.h87xHBPN.dpuf