உண்மைகள்

மறைக்கப்படும் மறுக்கப்படும் செய்திகளுக்காக...

Get The Latest News

Sign up to receive latest news

2/16/2015

| |

தற்போதைய கால கட்டத்தில் தமிழ் அகதிகளைதிருப்பிஅனுப்பவேண்டாம். மைத்திரிபாலசிறிசேன

தமிழ் நாட்டில் தங்கியுள்ள இலங்கைத் தமிழ் அகதிகளை தற்போதைய காலகட்டத்தில் திருப்பி அனுப்புவது பொருத்தமானது அல்ல என்று இந்தியப் பிரதமர் நரேந்திரமோடியிடம்,இலங்கை ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேன கோரிக்கை விடுக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கொழும்பிலுள்ள வட்டாரங்களை மேற்கோள்காட்டி, இந்தியன் எக்ஸ்பிரஸ் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளது.
ஆகதிகளை திரும்ப அழைப்பதற்கு இலங்கை அரசாங்கம் தயங்குவதற்கு இரண்டு காரணங்கள் இருப்பதாககூறப்படுகின்றது.உள்நாட்டில் இடம் பெயர்ந்த 26ஆயிரம் பேர் இன்னமும் மீளக்குடியேற்றப்படாமல் இருப்பதும், மீளக்குடியமர்வுக்கு காணிசுவீகரிப்புக்கு ஒரு பிரச்சனையாக இருப்பதும் முதற் காரணமாகசொல்லப்படுகின்றது. இரண்டாவதாக முப்பதாண்டுகளாக தமிழ் நாட்டில் வாழ்ந்துவிட்ட இலங்கைத் தமிழர்களை அங்கிருந்துதிருப்பி அழைப்பது மனிதத்தன்மை அற்றசெயல் என்று இலங்கைஅரசாங்கம் உணர்கின்றது.