உண்மைகள்

மறைக்கப்படும் மறுக்கப்படும் செய்திகளுக்காக...

Get The Latest News

Sign up to receive latest news

3/02/2015

| |

கிழக்கு மாகாணசபையில் மு.கா.வுக்கு வழங்கியை ஆதரவை அறுவர் வாபஸ் பெற்றனர்

11016041_786296574781346_5457651155109496183_nகிழக்கு மாகாண சபையில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆட்சியமைப்பதற்காக சத்தியக்கடதாசியின் மூலமாக தாங்கள் வழங்கிய ஆதரவை, முஸ்லிம் காங்கிரஸ் தன்னிச்சையாக செயற்படுவதாக கூறிஆறு உறுப்பினர்கள் வாபஸ் பெற்றுக்கொண்டனர்.
மு.கா., ஆட்சியமைப்பதற்காக மாகாண சபையிலிருக்கின்ற உறுப்பினர்களில் 20 பேர் சத்தியக்கடதாசியின் ஊடாக தங்களுடைய ஆதரவை தெரிவித்திருந்தனர். இதனையடுத்தே கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சராக நஷீர் அஹமட் தெரிவுசெய்யப்பட்டார். இந்நிலையில், ஆறு உறுப்பினர்களை மட்டுமே கொண்டிருக்கின்ற ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தன்னிச்சையாக செயற்படுவதாக கூறி, ஏனைய இரண்டு கட்சிகளைச்சேர்ந்த ஆறு உறுப்பினர்கள் தங்களுடைய ஆதரவை இன்று திங்கட்கிழமை வாபஸ் பெற்றுக்கொண்டனர்.
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் உறுப்பினர்களான விமலவீர திஸாநாயக்க, டப்ளியு.டி.எச் வீரசிங்க, ஜயந்த விஜேசேகர, டி.எம்.ஜயசேனவும் கட்சியை சேர்ந்த எம்.எஸ் உதுமாலெப்பை மற்றும் தேசிய காங்கிரஸை சேர்ந்த எம்.எல்.எம். ஆமீர் லெப்பை ஆகியோரே இவ்வாறு வாபஸ் பெற்றுக்கொண்டுள்ளனர். திருகோணமலை, கிறீன் வீதியிலுள்ள சன்செடன் விடுதியில் இன்று நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டிலேயே மேற்குறிப்பிட்ட அறுவரில் நால்வரே தங்களுடைய தீர்மானத்தை அறிவித்தனர்.
கிழக்கு மாகாணசபையில் முஸ்லிம் காங்கிரசுக்கான ஆதரவினை வாபஸ் பெற்றுக்கொண்ட உறுப்பினர்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன்
அவர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
இவர்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் சேர்ந்து ஆட்சி அமைப்பது தொடர்பாக ஆராயப்பட்டதாக அறிய முடிகின்றது.
இச்சந்திப்பில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் பிள்ளையான் செயலாளர் பூ.பிரசாந்தன் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆட்சியமைக்க தமது ஆதரவினை ஆரம்பம் முதலே பிள்ளையான் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.