உண்மைகள்

மறைக்கப்படும் மறுக்கப்படும் செய்திகளுக்காக...

Get The Latest News

Sign up to receive latest news

3/09/2015

| |

மகளிர் தின பிரகடனம்

பெண்களின் வலுவாக்கத்தின் ஊடாக குடும்ப, சமுக, அரசியல் சாதக, ஸ்திர தன்மையை எய்த முடியுமென திடமாக நம்புகின்றோம். பெண்களின் கல்வி ரீதியான  அடைவு போற்றுதற்குரியதாக இருக்கின்ற போதிலும் அவர்களின் சமுக அரசியல் ரீதியான பார்வை இன்னும் ஆழமாக்கப்பட வேண்டும்.

எமது மண்ணில் நடைபெற்ற கொடிய யுத்தத்தின் இழப்புக்களையும் வலிகளையும், அதிகம் சுமந்தவர்கள் பெண்களே! எனவே எமது சமுகத்தை மீள கட்டியமைப்பதிலும் மக்கள் சிந்தனையுள்ள தூர நோக்கான உறுதி மிக்க அரசியல் தலைமைத்துவத்தினை கட்டியெழுப்புவதிலும் எமது பெண்களின் பங்கு இன்னும் அதிகரிக்கப்பட வேண்டும்.

இன பிரச்சினை தீர்வு, நீடித்த சமாதானம், நிலையான அபிவிருத்தி போன்றவற்றில் எமது மகளிரின் கருத்துக்களும் செயற்பாடுகளும் உள்வாங்கப்படுவதனூடாகவே அவை முழுமை பெறும் என்று நாம் உறுதியாக நம்புகின்றோம்.

அதன் அடிப்படையில்,

1.    உள்ளுராட்சி மன்ற, மாகாணசபை, பாரளுமன்றங்களில் பெண்களின் பிரதிநிதித்துவத்திற்காக 33வீதமாவது இட ஒதுக்கீடு புதிய அரசியலமைப்புத் திருத்தத்தினூடாக உறுதிபடுத்தப்பட வேண்டும்.



2.    நாட்டின் நிருவாகத்துறை, இராஜதந்திரத்துறை, அரச நிறுவனங்களில் தலைமைத்துவப் பதவிகளில் பெண்களின் பங்களிப்பு குறைந்த பட்சம் 25வீதமாவது உறுதிபடுத்தப்பட வேண்டும்.



3.    தேசிய, பிராந்திய அரசியல் கட்சிகளில் முடிவெடுக்கும் அதிகாரமிக்க குழுக்களில் பெண்களின் பிரதிநிதித்துவம் உறுதிபடுத்தப்பட வேண்டும்.



4.    பல அரசியல் கட்சிகள் பெண்களின் பிரதிநிதித்துவத்திற்காக வழிகள் திறந்துவிட்ட போதும் கனிசமான தகுதியான பெண்கள் ஏற்க முன் வருவதில்லை இந்நிலை மாற்றப்பட்டு தகுதியுள்ள பெண்கள் உரிய பொறுப்புக்களை ஏற்பதற்கு முன்வர வேண்டும் அதற்கு ஏதுவாக குடும்ப, சமுக சூழல் வழிசமைத்து கொடுக்க வேண்டும்.



5.    சிறுவர், பெண்கள் மீதான வன்முறைகளுக்கு எதிரான சட்டங்கள் கடுமையாக்கப்படுவதோடு அவற்றை விசாரித்து துரித நடவடிக்கை மேற்கொள்ள தனியான நீதிமன்றங்கள் அமைக்கப்பட வேண்டும்



6.    யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பெண்கள்,சிறுவர்கள்,பெண் தலைமை தாங்கும் குடும்பங்களின் நலன்புரி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு மத்திய அரசாங்கத்தில் அமைச்சரவை அந்தஸ்துள்ள

தனியான அமைச்சு உருவாக்கப்பபடுவதோடு மாகாணசபைகளிலும் முதலமைச்சின் கண்காணிப்பின் கீழ் புதிய செயலகம் உருவாக்கப்பட வேண்டும்



7.    மத்திய கிழக்கு உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு பணிப்பெண்களாக செல்லும் பெண்களின் எண்ணிக்கை குறைக்கப்படுவதுடன் உள்நாட்டில் அவர்களுக்கான தொழில் வாய்ப்புக்கள் உருவாக்கப்பட வேண்டும்.



8.    காணாமல்போன, தடுத்து வைக்கப்பட்டிருக்கின்ற தமிழ் கைதிகள் தொடர்பாக அரசாங்கம் “வெள்ளை அறிக்கை’’ விடுவதுடன் மிகக் குறுகிய காலத்தில் அரசியல் காரணங்களுக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் விடுதலை செய்யப்படுவதுடன் காணாமற் போனவர்கள் தொடர்பாக பக்கச் சாhர்பற்ற சர்வதேச அணுசரனையுடன் விசாரனைகள் நடத்தப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதுடன் பாதிக்கப்ட்ட மக்களுக்கு உரிய நிவாரணங்களும் வழங்கப்பட வேண்டும்.



என சர்வதேச மகளிர் தினமான இன்று (08.03.2015)இல் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி மகளிர் அணியினராகிய நாம் பிரகடனம் செய்கின்றோம்.