உண்மைகள்

மறைக்கப்படும் மறுக்கப்படும் செய்திகளுக்காக...

Get The Latest News

Sign up to receive latest news

3/24/2015

| |

வடக்கு மக்களின் பிரச்சினைகளுக்கு எமது பதவிக் காலத்துக்குள் தீர்வு

அரசியல் மேடைகளில் பேசுவதோடு மாத்திரம் நின்றுவிடாது வடக்கு மக்களின் பிரச்சினைகளையும் எமது பதவிக் காலத்திற்குள் தீர்த்து வைப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று யாழ்ப்பாணத்தில் தெரிவித்தார் பலாலி பிரதேசத்தில் உள்ள வளலாய் பகுதியில் அதியுயர் பாதுகாப்பு வலயத்திலிருந்து விடுவிக்கப்பட்ட காணிகளை உரிமையாளர்களுக்கு கையளிக்கும் வைபவத்தில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
கடந்த யுத்த காலத்தில் வசாவிளான் பகுதியில் அதியுயர் பாதுகாப்பு வலயத்தின் கீழ் கொண்டுவரப்பட்ட காணிகளில் ஆயிரம் ஏக்கர்களை ஆரம்ப கட்டமாக உரிமையாளர்களிடம் கையளிப்பதற்கு அரசாங்கம் நடவடி க்கை எடுத்துள்ளது.
இத்திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக நானூறு ஏக்கர் காணிகள் உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டன. இவ்வைபவத்தில் உரையாற்றும்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கா குமாரதுங்க, வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன், அமைச்சர்கள் டி. எம். சுவாமிநாதன், எம். கே. டி. எஸ். குணவர்தன, வட மாகாண ஆளுநர் பலிகக்கார, பிரதியமைச்சர் திருமதி விஜயகலா மகேஸ்வரன், பாராளுமன்ற உறுப்பினர்கள் முருகேசு சந்திரகுமார், மாவை சேனாதிராஜா,
சுரேஷ் பிரேமச்சந்திரன், டக்ளஸ் தேவானந்தா உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்ட இவ்வைப வத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தொடர்ந்தும் உரையாற்று கையில், நான் கடந்த மூன்று மாதகாலப் பகுதியில் மூன்று தடவைகள் யாழ். குடா நாட்டுக்கு வருகை தந்துள்ளேன். முதலில் உங்களது வாக்குகளை கேட்டு ஜனாதிபதி அபேட்சகராக இங்கு வந்தேன். அதன் பின் வட மாகாண அபிவிருத்தி மீளாய்வு கூட்டத்திற்கு வருகை தந்தேன். இப்போது உங்களுக்குக் காணிகளை கையளிப் பதற்கு வருகை தந்துள்ளேன்.
யுத்தமும், அதன் பின்னரான நிகழ்வுகளும் இப்பிரதேசங்களில் காணிகள் தொடர்பான பிரச்சினைகளைத் தோற்றுவித்துள்ளன. ஆனால் காணிப் பிரச்சினை என்பது நேற்று, இன்று உருவானதல்ல. உலகில் ஏற்படும் அரசியல் மாற்றங்களுக்கும், அரசியல் புட்சிகளுக்கும் காணிப் பிரச்சினையே அடிப்படை. ஏழை-பணக்காரன் பிரச்சினைகளுக்கும் காணியே முக்கிய காரணம் என கார்ள்ஸ்மாக்ஸ் குறிப்பிட்டுள்ளார்.
அரசியல்வாதிகள் என்றவகையில் இவற்றை நாம் புரிந்துகொள்ளவேண்டும். வடக்கு, கிழக்கில் மாத்திரமல்லாமல் கொழும்பிலும் கூட காணிப்பிரச்சினை உள்ளது. இப்பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பதற்கு நாம் நடவடிக்கை எடுத்துள்ளோம்.
இப்பணியை நாம் இப்போது ஆரம்பித்துள்ளோம். இவற்றைத் தொடங்கும்போது சில குறைபாடுகள் இருக்கலாம். அவற்றைப் பணிகள் தொடர்ந்து கொண்டிருக்கும் போதே தீர்த்து விடமுடியும். நீங்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளை உங்களது தலைவர்கள் எமது கவனத் திற்குக் கொண்டு வருகின்றார்கள். உங்களுக்குப் பலவிதமான பிரச்சினைகள் உள்ளன. எம்மீது நீங்கள் நம்பிக்கை வைத்துள்Zர்கள். உங்களது பிரச்சினைகளை நாம் தீர்த்து வைப்போம்.
அரசியல் மேடைகளில் பேசுவதோடு நின்று விடாது உங்களது இல்லங்களுக்கு நேரில் வருகை தந்து உங்களோடு கலந்துரையாடி உங்கள் தேவைகளையும், எதிர்பார்ப்புக்களையும் எதிர்பார்த்துள்ளோம். இந்நாட்டில் வாழும் சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் அனைவரதும் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும், இனங்களுக்கிடையிலான சந்தேகமும், நம்பிக்கையீனமும், ஐயமும் களையப்பட வேண்டும். இதற்கென விஷேட ஜனாதிபதி செயலணியொன்றை நாம் அமைத்துள்ளோம். இதற்கு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க வழிகாட்டுகிறார்.
நாம் உங்களது காணிகளை மாத்திரம் மீளளிக்க நடவடிக்கை எடுக்கவில்லை. மாறாக யுத்தம் காரணமாக அழிவுற்ற வழிபாட்டுத் தலங்கள் உள்ளிட்ட பொது இடங்களையும் மீளமைக்கவும் நாம் நடவடிக்கை எடுத்துள்ளோம்.
இங்கு வாழும் மக்களின் வாழ்வு நிலையைப் பார்க்கும்போது எமக்கு மனவேதனை ஏற்படுகின்றது. நீங்கள் பலவிதமான அசெளகரியங்களுக்கு மத்தியில் உயிர் வாழுகின்aர்கள். உங்களுக்கு குடிநீர் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் உள்ளன. இவற்றை நாமறிவோம். அதனால் நீங்களும் உங்கள் பிள்ளைகளும் ஆரோக்கியமாகவும், வளமாகவும் வாழ்வதற்கு ஏற்ற வகையில் இப்பிரதேசங்களை அபிவிருத்தி செய்வதற்கும் நாம் திட்டமிட்டுள்ளோம். அதற்குத் தேவையான அனைத்து உதவிகளையும் வட மாகாண சபைக்கு நாம் வழங்குவோம். நீங்கள் முகம் கொடுத்துள்ள காணிப் பிரச்சினை உள்ளிட்ட அனைத்து பிரச்சினைகளை முன்னுரிமை அடிப்படையில் தீர்த்து வைப்பதற்கு நாம் நடவடிக்கை எடுத்துள்ளோம்.
அதேநேரம் நீங்கள் முகம் கொடுத் துள்ள மீன்பிடிப் பிரச்சினையை தீர்த்து வைக்கவும் நாம் நடவடிக்கை எடுத்துள்ளோம்.