உண்மைகள்

மறைக்கப்படும் மறுக்கப்படும் செய்திகளுக்காக...

Get The Latest News

Sign up to receive latest news

3/08/2015

| |

பிரான்ஸை சேர்ந்த இயக்குனர் ஜாக் ஓடியாரின் திரைப்படத்தில் எழுத்தாளர் ஷோபா சக்தி

புலம்பெயர் தமிழரான ஷோபா சக்தி எண்பதுகளில் விடுதலைப்புலி இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டவர். அவர்களின் நடைமுறையும், மக்களின் மேல் அவர்கள் செலுத்தும் அதிகாரமும் அந்த இயக்கத்திலிருந்து ஷோபா சக்தியை வெளியேற்றியது.
 
சிங்கள அரச வன்முறைக்கு இணையாக புலிகளின் இனப்போராட்ட வன்முறையையும் சுட்டிக்காட்டி எதிர்த்து வரும் ஷோபா சக்தி இப்போது உலகம் அறிந்த எழுத்தாளர். அவரது மூன்று நாவல்களும், சிறுகதைகளும் பல உலக மொழிகளில் மொழிப்பெயர்க்கப்பட்டு பரவலான வரவேற்பை பெற்று வருகின்றன. அவரது சமீபத்திய சிறுகதைத் தொகுப்பான கண்டிவீரன் முக்கியமான படைப்பு.
 
லீனா மணிமேகலையின் செங்கடல் திரைப்படத்தின் ஸ்கிரிப்டை எழுதிய ஷோபா சக்தி, பிரான்ஸை சேர்ந்த இயக்குனர் ஜாக் ஓடியாரின் திரைப்படத்தில் நடித்துள்ளார். இது ஈழத்தமிழர்களைப் பற்றிய படம். படப்பிடிப்பு முடிந்து படம் ரிலீஸுக்கு தயாராக உள்ளது.