4/28/2015

| |

பிள்ளையான் கட்டியதை தண்டாயுதபாணி திறந்தார்
கிழக்கு மாகாணசபையின் பிள்ளையானின் ஆட்சிக்காலம் ஒரு அபிவிருத்தி யுகமாக இருந்தது என்பதை அவரது எதிரிகள் கூட மறுக்கமுடியாது.முன்பொருதடவை கூட்டமைப்பு எம்பி செல்வராஜாவின் ஊரான கல்லாறு கிராமத்தில்  ஒரு திறப்புவிழாவில் பிள்ளையான் கலந்துகொண்டபோது அவ்விழாவில் தானும் கலந்துகொண்ட கூட்டமைப்பு எம்பி செல்வராஜா "முதலமைச்சர் அபிவிருத்தியில் மன்னன் என்பதை ஒப்புக்கொள்கின்றேன்" என்று தன வாயார புகழ்ந்தார்.


அந்த அளவுக்கு   பிள்ளையான் கிழக்கு அபிவிருத்திக்காகஅரசுடன் இணைந்து செயல்பட்ட காரணத்தால் பல்வேறு நிதி ஒதுக்கீடுகளை செய்திருந்தார்.அந்த நிதி ஒதுக்கீடுகளால் இதுவரை காலமும் பூரணமாகாதிருந்த கட்டிடங்களை இப்போது கூட்டமைப்பின் கிழக்குமாகாண அமைச்சர்கள் தேடித்தேடி திறந்து வைத்து வருகின்றனர்.

ஒருபுறம் அபிவிருத்தியல்ல உரிமையே வேண்டும் என்று பிள்ளையானை கிண்டலடித்த கூட்டமைப்பினர் இப்போது அபிவிருத்திபணிகளை முன்னெடுத்து வருகின்றனர்.ஆனால் அதைக்கூட தமது முயற்சியில் செய்ய முடியாத கிழக்கு கூட்டமைப்பு அமைச்சர்கள் பிள்ளையான் ஒதுக்கிய நிதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள கட்டிடங்களை துருவித்துருவி ஆராய்ந்து "திறப்புவிழாவுக்கு ஏற்பாடு செய்யுங்கள் நாங்கள் வருகின்றோம்"என்று அதிகாரிகளை பணித்து  வருகின்றனராம்..

அந்தவகையில் மட்/முனைக்காடு சாரதா வித்தியாலயத்தின் புதிய கட்டிடத் திறப்பு விழா இன்று (28/04/2015) வித்தியாலயத்தில் மிகச் சிறப்பாக இடம்பெற்றது.
சுமார் 4  மில்லியன் ரூபாய் செலவில் சி.சந்திரகாந்தனின் முன்மொழிவுமூலம் அமைக்கப்பட்ட  இக்கட்டிடத்தினை கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் சி.தண்டாயுதபாணி வைபவரீதியாக திறந்து வைத்தார். இக்கட்டிடமானது  ஓர் அதிபர் அலுவலகத்தையும் நான்கு வகுப்பறைகளையும்இ கொண்டு அமைக்கப்பட்டுள்ளது.
 
2010ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இப்பாடசாலையில் தரம் - 01 முதல் தரம் - 05 வரையான மாணவர்கள் கற்பதுடன்  மாணவர்கள் கிராம அபிவிருத்திச் சங்கத்திற்கு சொந்தமான பலநோக்கு மண்டபத்திலும்இ  மரநிழல்களிலும் தற்காலிக கொட்டில்களிலும் தங்களது கல்வியை தொடர்ந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.அதனைத்தெடர்ந்தே சி.சந்திரகாந்தன் நிதி ஒதுக்கியிருந்தார்