உண்மைகள்

மறைக்கப்படும் மறுக்கப்படும் செய்திகளுக்காக...

Get The Latest News

Sign up to receive latest news

5/02/2015

| |

உலக தொழிலாளர் தின வாகன பேரணி மட்டக்களப்பு- தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்

 உலக தொழிலாளர் தினத்தை முன்னிட்டு தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியினால் வருடாவருடம் நடாத்தப்படும் தொழிலாளர் தின நிகழ்வு இம் முறை மட் /முறகொட்டாஞ்சேனை பிரதேசத்தில் மிக பிரமாண்டமாக கொண்டாடப்பட்டது. 
"புதிய சட்டதிருத்தங்களில் தமிழர்களின் உரிமையினை உறுதி செய்வோம்" என்ற தொனிப்பொருளில் இவ்வருடமும் உலக தொழிலாளர் தின நிகழ்வு மட்டக்களப்பு முறக்கொட்டாஞ்சேனை ஞானஒளி விளையாட்டு மைதானத்தில் பி.பகல் 4.30 மணிக்கு கௌரவ தலைவர் சி.சந்திரகாந்தன் அவர்களின்
தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.
இன் நிகழ்விற்கான வாகன பேரணி மட்டக்களப்பு வாவிக்கரை வீதியில் அமைந்துள்ள தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் தலைமைக் காரியாலயத்தில் இருந்து பி.ப 2.00 மணிக்கு ஆரம்பமாகியது.
மோட்டார் சைக்கிள், ஓட்டோ, டக்ரர், சிற்றூர்ந்து, பேரூந்து உள்ளிட்ட வாகனங்களின் பேரணியும் ஊர்வலமும் சிறப்பாக நடைபெற்றதுகிழக்குமாகாணத்தின் மூன்று  மாவட்டங்களிலுமிருந்து பல்வேறு தொழிசங்கங்களும் இந்த ஊர்வலத்தில் பங்கெடுத்தனர்.