உண்மைகள்

மறைக்கப்படும் மறுக்கப்படும் செய்திகளுக்காக...

Get The Latest News

Sign up to receive latest news

5/26/2015

| |

மண்டூர் கொலையின் பின்னணியில் சாதி பூசல்கள்

மண்டூர்  முருகன்  கோவில்

மட்டக்களப்பு மண்டூர் பிரதேசத்தில் இன்று காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.இவர் நாவிதன் வெளி பிரதேச செயலகலத்தில் சமுக சேவை உத்தியோகஸ்தராக பணிபுரிபவர் ஆகும்.
கொல்லப்பட்டவர் சத்திரசிகிச்சை ஒன்றை மேற்கொண்டதன் காரணமாக வீட்டில் இருந்துள்ளார். இந்த நிலையில் இன்று காலை 9.30 மணியளவில் வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் சென்ற இருவர் அவரை வாசலுக்கு அழைத்து உரையாடிக்கொண்டிருந்துவிட்டு பின்னரே சுட்டுவிட்டு தப்பி சென்றுள்ளனர்.இவர்கள் தமது தலை கவசத்தை கழற்றாத நிலையில் தனது கணவருடன் பேசிக்கொண்டிருந்தமையால் அவர்கள் யாரென தன அடையாளம் காண வில்லை என அவரது மனைவி தெரிவித்தார்.

இவரது கொலை சாதிபிரச்சனை காரணமாக நிகழ்த்தப்பட்டிருக்கலாம் என பரவலாக நம்பப்படுகின்றது.மண்டூர் கந்த சுவாமி கோயிலின் திருவிழாக்களை தமக்குள்ள பங்கீட்டுக்கொள்ளும் முயற்சியில் நீண்ட காலமாக அங்குள்ள ஆதிக்க சமூகங்களிடையே ஏற்பட்டுவரும் முரண்பாடுகளின் பின்னணியிலேயே இக்கொலை நிகழ்த்தப்பட்டுள்ளது என பரவலாக அக்கிராம மக்களிடையே பேசப்படுகின்றது.