உண்மைகள்

மறைக்கப்படும் மறுக்கப்படும் செய்திகளுக்காக...

Get The Latest News

Sign up to receive latest news

5/20/2015

| |

சென்னையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் வெட்டிக் கொலை

விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த வெற்றி செல்வன்  என்பவர் இன்று காலை சென்னை மடிப்பாக்கத்தில் வெட்டிக் கொலை செய்யப்பட்டர்.
5 பேர் கொண்ட கும்பல் அவரை ஓட ஓட விரட்டி வெட்டிக் கொன்றனர். வெற்றிச் செல்வன் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனின் தனிச் செயலாளராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இச்சம்பவம் அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. 
இந்த சம்பவம் விடுதலை சிறுத்தைகள் கட்சியினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இச்சம்பவம் குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டுள்ளனர்.