5/18/2015

| |

பாடசாலை மாணவி வித்யா சிவலோகநாதனுக்கு இழைக்கப்பட்ட கூட்டுப் பாலியல் வன்கொடுமைக் கொலையை கண்டிக்கிறோம்!


Résultat de recherche d'images pour "stop viole"

வித்தியாவுக்கு நேர்ந்த கதிக்கு எதிராக 98 பெண்ணிய செயற்பட்டாளர்கள் கையெழுத்திட்டு ஒரு கண்டன அறிக்கையை வெளியிட்டுள்ளனர்.அவ்வறிக்கை கீழ்வருமாறு 

மே மாதம்13 ம்திகதி பாடசாலைக்குச் சென்ற புங்குடுதீவு மகாவித்தியாலத்தின்உயர்தரவகுப்பு மாணவி வித்யா சிவலோகநாதன் கடத்தப்பட்டுபின் கூட்டுப்பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டுமறு நாள் சடலமாக மீட்டெடுக்கப்பட்டுள்ளார்.
ஆணாதிக்கக் கட்டமைப்பில் உருவாக்கப்பட்டிருக்கும்எமது சமூகத்தில்பெண்கள் குடும்பத்துக்குள்ளும்,வெளியுலகிலும், வேலைத்தளங்களிலும், பாடசாலைகளிலும்,மத நிறுவனங்களிலும்,அரசின் கையிலும்நாளாந்தம் அனுபவித்துவரும்வன்முறைகளின் நீட்சியே வித்யாவிற்கு நிகழ்ந்த இக்கோரச்சம்பவம்ஆகும். பெண்கள்சுதந்திரமாகப் பயமின்றி ஆண்களுக்குச் சமமாக எங்கும்உலவி வரவும்,அவர்கள் சுயவெளிப்பாட்டுடன்பொதுவெளியில் இயங்கவும், அவர்களுக்குத் தகுந்த உத்தரவாதமற்றநிலை தொடருவதன்சாட்சியங்களே இச்சம்பவங்கள்.
மாங்குளத்தைச் சேர்ந்த மாணவி சரண்யா கூட்டுவன்முறைக்குஉட்படுத்தப்பட்டு கொலைசெய்யப்பட்டு இரண்டு மாத இடைவெளிக்குள்வித்யாவிற்கு இந்நிலை ஏற்பட்டிருக்கிறது.
இலங்கையில் மட்டும் 2012 க்கும் 2014க்கும் இடையிலானகாலத்தில் 4393 வன்கொடுமைச்சம்பவங்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளன.இவை முன்னையஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் 20 வீதமாக அதிரித்துள்ளன.
இலங்கையில் கடந்த காலங்களிலிருந்து இன்றுவரை பொலிஸாரினாலும்,இராணுவத்தினராலும், பெண்கள் பாலியல்பலாத்காரங்களிற்கும் வன்கொடுமைகளிற்கும்உள்ளாக்கப்பட்டு வருகின்றனர். எனினும் இத்தகையபாலியல் வன்கொடுமைகள்எமது சமூகத்தின்சக உறுப்பினர்களினாலும்,உறவுகளினாலும் நடத்தப்படுவதும் அதிகரித்துக்கொண்டுதான் இருக்கின்றன. ஆனால் அவை பதிவுக்குள்ளாக்கப்படுவதோ,கருத்தில் எடுத்துக்கொள்ளப்படுவதோமிகவும் அரிதாகவேஉள்ளது என்பதுஎமது கடந்தகாலஅனுபவமாகும்.
பெண்களிற்கு நீதி வழங்க வேண்டிய அரசும்,அரச நிறுவனங்களும்குற்றவாளிகளைக் காப்பாற்றும் காரியத்தையே தொடர்ந்தும் செய்துவருகின்றன. இலங்கையில் இத்தகைய வன்கொடுமையாளர்களைச் சட்டத்தால் தகுந்த முறையில் தண்டிக்கப்படக்கூடிய வலுவானசட்டங்கள் அமுலில்இல்லாததும் இவ்வகையான வக்கிரங்கள் தொடர்வதற்கு முக்கியகாரணமாகும்.
இக் கொடூரச்செயலுக்கு நாம்எமது வன்மையானகண்டனத்தை தெரிவிப்பதோடுகீழ்க்கண்ட கோரிக்கைகளையும் முன்வைக்கிறோம்.
• வித்யாவின் சம்பவத்துடன் தொடர்பானகுற்றவாளிகளைச் சட்டத்தின் முன்னிறுத்தி தண்டனையளிக்கப்படவேண்டும்.
· • இலங்கையில்பெண்களிற்கெதிரான சகல வன்முறைகளையும் தண்டிக்கும் முகமாகவலுவான சட்டங்கள்இயற்றப்பபடவேண்டும்.
· நடைமுறையிலிருக்கும் சட்டங்கள் மீள்பரிசீல ணை செய்யப்பட்டு, அவை பெண்களின் உரிமைகளைப் பாதுகாத்து நீதி வழங்கும் முகமாக அமுல்படுத்தப்படவேண்டும்.
· இதுபோல் இன்னும் விசாரிக்கப்படாமலுள்ளபாலியல் பலாத்காரம்சம்பந்தமான வழக்குகள் விசாரனைக்குட்படுத்தப்பட்டுதகுந்த நீதிவழங்கப்படவேண்டும்.
• பாடசாலைகள் மற்றும் கல்விநிறுவனங்களில்பெண்களிற்கெதிரான வன்முறைகளை எதிர்கொள்ளல் மற்றும் அவற்றைத்தடுப்பதற்கான சூழலை உருவாக்குவதற்கும் சகல மட்டங்களிலும்விழிப்புணர்வை ஏற்படுத்தக்கூடிய வேலைத்திட்டங்களைஅமுல்படுத்தல் வேண்டும்.
• பெண்களிற்கெதிரானவன்முறை மற்றும்பாலியல் வன்கொடுமைச்சம்பவங்கள் முறையிடப்படும் அலுவலகங்களிலும்,வழக்குகளை விசாரிக்கும்நிர்வாகத்திலும் கணிசமான பெண்களின் பிரதிநிதித்துவம் இருத்தல் வேண்டும்.
• மேலே குறிப்பிட்டுள்ள கோரிக்கைகளைநடைமுறைபடுத்த இலங்கையில் இயங்கும் சகல அரசியல்சமூக ஜனநாயகமனிதவுரிமை அமைப்புகள் அரசாங்கத்திற்குஅழுத்தங்களைக் கொடுக்க வேண்டும்.
பெண்கள் சந்திப்புத்தோழிகள் மற்றும்பெண்ணிய சமூகசெயற்பாட்டாளர்கள்.
1. கேசாயினி எட்மண்ட் (இலங்கை)
2. நளினிரட்ணராஜ்(இலங்கை)
3. ஸர்மிளாஸெயித்(இலங்கை)
4. தமயந்திகே.எஸ்(தமிழ்கவி)(இலங்கை)
5. சுவர்ணசிறிஆர்.எம்(இலங்கை)
6. மாலினிமாலா(இலங்கை)
7. பிரியந்தினிஆனந்தசிவம்((இலங்கை)
8. வாணிகுமாரவேல்(பிரான்ஸ்)
9. நிலாலோகநாதன்(இலங்கை)
10. ரஹிமாபைசால்(இலங்கை)
11. அப்துல்ஹக்லறினா(இலங்கை)
12. பிரசன்னாஇராமசுவாமி(இந்தியா)
13. வினோதினிசச்சியானந்தன்
14. ஜெயராணிநோர்பேர்ட்
15. விஜி(பிரான்ஸ்)
16. புஸ்பராணி(பிரான்ஸ்)
17. தர்மினி(பிரான்ஸ்)
18. வசந்தி(பிரான்ஸ்)
19. ஷீலா(பிரான்ஸ்)
20. வனஜா(பிரான்ஸ்)
21. நிர்மலாஇராஜசிங்கம்(இங்கிலாந்து)
22. நவஜோதியோகரட்ணம்(இங்கிலாந்து)
23. மீனாள்நித்தியானந்தன்(இங்கிலாந்து)
24. சந்திராரவீந்திரன்(இங்கிலாந்து)
25. ரஞ்சனாராஜ்( இங்கிலாந்து)
26. வாணிலாமகேஸ்
27. ராஜேஸ்வரிபாலசுப்பிரமணியம்(இங்கிலாந்து)
28. ரஜிதா(இங்கிலாந்து)
29. தினேஷா(இங்கிலாந்து)
30. நிவேதாஉதயன்(இங்கிலாந்து)
31. சசிநவரட்ணம்(இங்கிலாந்து)
32. பானுபாரதி(நோர்வே)
33. ஜெயசிறிரவீந்திரன்(நோர்வே)
34. தனுஜாதுரைராஜா(சுவிற்சிலாந்து)
35. மேனகாஉமாகாந்தன்(சுவிற்சிலாந்து)
36. பத்மபிரபா((சுவிற்சிலாந்து)
37. பாமதிசோமசேகரம்(அவுஸ்ரேலியா)
38. சுமதி(கனடா)
39. நிருபா(கனடா)
40. பிரதீபாகனகாதில்லைநாதன்(கனடா)
41. காவோரிவேலழகன்(கனடா)
42. கோசல்யாசொர்ணலிங்கம்(ஜேர்மனி)
43. மல்லிகா(ஜேர்மனி)
44. மங்கையற்கரசி((ஜேர்மனி)
45. மேரி(ஜேர்மனி)
46. தேவா(ஜேர்மனி)
47. கமலா(ஜேர்மனி)
48. தர்சனா(ஜேர்மனி)
49. உமா(ஜேர்மனி)
50. தமிழ்மகளிர்மன்றம்-ஸ்ருட்காட்((ஜேர்மனி)
51.ராணிநகுலேந்திரம்(இங்கிலாந்து)
52.ஓவியாநகுலேந்திரம்(இங்கிலாந்து)
53.அநாமிகாநகுலேந்திரம்(இங்கிலாந்து)
54.சிவயோகம்தியாகராசா(இங்கிலாந்து)
55.நாகேஸ்வரிதவரட்ணம்(இங்கிலாந்து)
56.ஈஸ்வரிசோமசுந்தரம்(ஜேர்மனி)
57. திருமகள்வலன்ற்றைன் (ஜேர்மனி)
58. சிந்துஜா கரோல்( பிரான்ஸ் )
59. ரூபி(பிரான்ஸ்)
60.அர்ச்சுனி ஜெபா(பிரான்ஸ்)
61.அஜந்தா சுந்தரலிங்கம்( பிரான்ஸ்)
62.மதுமிதா (பிரான்ஸ்)
63.லுணுகல சிறி(இலங்கை)
64.ஞானசக்தி சிறிதரன்(இந்தியா)
65.மாதவி சிவலீலன்(இங்கிலாந்து)
66.வரலக்சுமி ராகவன்(ஜேர்மனி)
67. கமலா வாசுகி(இலங்கை)
68.விஜிதாலோகநாதன்(ஜேர்மனி)
69.சுருதிகண்ணன்(ஜேர்மனி)
70.மகாலக்சுமிகுருசாந்தன்(இலங்கை)
71.ஸி.எஜ்.ஜெயந்தா(இலங்கை)
72.டி.லிசாந்தி(இலங்கை)
73.ஸி.எஜ்.கமிலா(இலங்கை)
74.எஸ்.ஜி.நிஷாந்தி(இலங்கை)
75.பி.அருள்சிலி(இலங்கை)
76.எல்.சுபாஷினி(இலங்கை)
77.எஜ்.லிண்டா(இலங்கை)
78. எ.டபிள்யு.எப் அக்கரைப்பற்று(இலங்கை)
79.வாணி(இலங்கை)
80.ராஜலெட்சமி(சுமி)(இலங்கை)
81.கனகா(இலங்கை)
82.குணா(இலங்கை)
83.மாலதி(இலங்கை)
84.சுமிதி(இலங்கை)
85.ராஜலட்சுமி சுப்பிரமணியம்- MWDRF(இலங்கை)
86.சுரஸ்தாஸ் சிவகலா- MWDRF(இலங்கை)
87.ராஜ்மோகன் ப்ரியா-MWDRF(இலங்கை)
88.வலுப்பிள்ளை மிதுனா-MWDRF(இலங்கை)
89.ஹம்தூன் ஜூமானா- MWDRF(இலங்கை)
90.சுமதி அமலதாஷ் -MWDRF(இலங்கை)
91.ருசீகா ரஜப்டீன் -MWDRF(இலங்கை)
92.அனீஸ் நஸிரா-MWDRF(இலங்கை)
93. யன்சிலா மஜித்-MWDRF(இலங்கை)கவிதா94.சண்முகநாதன்(இங்கிலாந்து)
95.அதீதாசிவானந்தன்(கனடா)
96.வளர்மதி (சுவிற்சிலாந்து)
97 ஜெயந்தி பிரான்ஸ்)
98 ரதி (பிரான்ஸ்)