5/04/2015

| |

மட்டக்களப்பு மாநகரசபையின் ஏற்பாட்டில் சுவாமி விபுலானந்தர் ஜனன தின நிகழ்வுகள்

மட்டக்களப்பு மாநகரசபையின் ஏற்பாட்டில் சுவாமி விபுலானந்தர் ஜனன தின நிகழ்வுகள்


தமிழ் கூறும் உலகில் தனக்கென தனியிடத்தினைக்கொண்டுள்ள சுவாமி விபுலானந்த அடிகளாரின் 123வது ஜனன தினம் இன்றாகும்.இதனை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் நிகழ்வுகள் நடைபெற்றுவருகின்றன.


மட்டக்களப்பு மாநகர சபையினால் ஏற்பாடுசெய்யப்பட்ட சுவாமி விபுலானந்த அடிகளாரின் 123வது ஜனன தினம் இன்று காலை மாநகர திருநீற்று பூங்காவில் சிறப்பாக நடைபெற்றது.

மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் மா.உதயகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு வலய கல்விப்பணிப்பாளர் கே.பாஸ்கரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது விபுலானந்த அடிகளாரின் திருவுருவச்சிலைக்கு மாலைகள் அணிவிக்கப்பட்டு மாணவிகளினால் பண்ணிசை இசைக்கப்பட்டது.