5/07/2015

| |

உலக நாச்சியார் கோட்டை தொடர்பாக கலந்துரையாட நேரம் ஒதுக்கித் தரப்பட வேண்டும். த.ம.வி.புலிகள்- செயலாளர்-பூ.பிரசாந்தன்

உலக நாச்சியார் கோட்டையையும் காசி லிங்கேஸ்வர ஆலய இடிபாடுகளும் அகற்றப்படுவது தொடர்பாக கலந்துரையாட நேரம் ஒதுக்கித் தரப்பட வேண்டும்.
த.ம.வி.புலிகள்- செயலாளர்-பூ.பிரசாந்தன்

  ஆரையம்பதி பிரதேசத்தின் சிகரம் பகுதியில் சுமார் 312ம் நூற்றாண்டுப் பகுதியில் வாழ்ந்த கிழக்கின் முதல் சிற்றரசி உலக நாச்சியின் கோட்டையும் அழிக்கப்பட்ட ஈச்சரங்களில் ஒன்றான காசி லிங்கேஸ்வரர் ஆலயம் அமைந்திருந்த இடத்தில் இடிபாடுகளும் இன்று திட்டமிட்ட குடியிருப்புக்களும் பள்ளிவாசலும் அமைப்பதற்காக பிரதேச மக்களின் எதிர்ப்புக்களை தாண்டி வலுக்கட்;டாயமாக புராதன சின்னங்கள் அகற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றது. அரசியல் பேதங்களுக்கு அப்பால் தமிழர்கள் கிழக்கின் முதல் சிற்றரசியின் கோட்டை மற்றும் காசி லிங்கேஸ்வரர் ஆலயத்தின் இடிபாடுகளையும் புராதன பொருட்களையும் அகழ்வாராட்சி செய்து இப்பிரதேசத்தில் புதையுண்டுள்ள வரலாற்று பொக்கி~ங்களை அடையாளப்படுத்துமாறு கடந்த பல வருடங்களாக கோரிக்கை விடப்பட்டு வருகின்ற போதிலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படாது காணப்படுகின்றது. ஆகவே இது குறித்து மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டத்தில் குறித்த பிரச்சினையினை ஆராய்வதற்கு நேரம் ஒதுக்கி தரும் படி மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி P.ளு.ஆ. சாள்ஸ் அவர்களுக்கு முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பூ.பிரசாந்தன் கடிதம் எழுதியுள்ளார்.
இது தொடர்பாக அவர் கருத்து தெரிவிக்கையில்:
இது தனிமனித பிரச்சினை அல்ல இலங்கையில் வாழும் தமிழர்களின் பிரச்சினை. குறித்த பிரச்சினையானது தமிழர்களின் இருப்புடன் சம்பந்தப்பட்ட பிரச்சினை நாட்டில் நல்லாட்சியும் கிழக்கில் இன ஒருமைப்பாட்டு ஆட்சியும் நடத்தும் அரசியல் தலைமைகள் அண்மைக்காலமாக வாகரை முதற்கொண்டு தமிழர்களின் பூர்வீகக் காணிகளை பலவந்தமாக சிலர் ஆக்கிரமித்து வருவது தொடர்பாக இனத்துவ ஆட்சியாளர்களோ இன ஒற்றுமைகளை பேசி வரும் தமிழ் தேசிய மற்றும் இஸ்லாமியத் தலைவர்களோ விட்டுக்கொடுப்புடன் செயற்பட முன்வருவதாக இல்லை. ஆகவே முறையான இன ஒற்றுமை பேணப்பட வேண்டுமானால் இதய சுத்தியுடனான விட்டுக்கொடுப்புகள் தேவை. ஒரு சாரார் விட்டுக்கொடுப்புடன் செயற்பட மறு சாரார் தமது செயற்பாட்டில் கண்ணுங் கருத்துமாக முன்னேறிக் கொண்டு செல்வதுதான் கிழக்கில் வேதனைக்குரியது. அது மட்டுமன்றி தமிழ் தலைமைகள் தமக்குள்ளேயே அறிக்கை விட்டுக்கொண்டு தமக்குள்ளேயே குறைகூறிக் கொண்டிருப்பது மட்டும் அரசியலல்ல. மட்டக்களப்பில் தமிpழர்களின் இருப்பே கேள்விக்குறியாக உள்ள நிலையில் இனத்துவம் நல்லாட்சி தொடர்பான கோசங்களை இதய சுத்தியுடன் நடைமுறைப்படுத்த கிழக்கு மாகாண சபை முன்வர வேண்டும். மாறாக தமிழ் மக்களின் மனங்களை நோகடிக்கக் கூடாது” எனக் குறிப்பிட்டார்.
எம் மதத்தவராலும் இறைவனைத் துதிக்க, ஆலயங்கள், பள்ளிவாயல்கள், தேவாலயங்கள், பன்சாலைகள் அமைக்கப்பட வேண்டியதுதான் மாறாக இன்னுமொரு மதத்தின் மதத்தவரின் மனங்களை துவம்சம் செய்து திட்டமிட்டு வணக்கஸ்தலங்களை ஆளில்லா இடங்களில் அமைப்பதை எப்படி நியாயப்படுத்த முடியும்? புராதன பொருட்கள் பேணிப் பாதுகாக்கப்பட வேண்டிய விலைமதிக்க முடியாதவை. எதிர்கால சந்ததிக்கு எமது கடந்த கால இருப்புக்களை தெளிவுபடுத்த, ஆதாரங்களாக அமைபவையினை யாரும் அழிக்க இடம் கொடுக்கலாகாது எனவும் குறிப்பிட்டார்.