5/28/2015

| |

கருணை அரசாங்கத்துக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை

அரசாங்கத்துக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் எதிராக எதிர்வரும் ஜூன் மாதம் 9ஆம் திகதி, நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்றை சமர்ப்பிக்கவுள்ளதாக முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவித்தார். கொழும்பில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டின் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய மஹிந்தானந்த, 'புதிய அரசாங்கத்துக்கு 100 நாட்களுக்கு மேலதிகமாக 50 நாட்கள் கொடுத்தாகிவிட்டது' என்றார். 'அரசாங்கத்துக்கும் பிரதமருக்கும் எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை, எதிர்வரும் 9ஆம் திகதி சமர்ப்பிக்கப்படும். இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையில், நேற்று இரவு வரையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 84பேர் கையெழுத்திட்டுள்ளனர். மொத்தமாக 130பேர், இதில் கைச்சாத்திடுவர். அமைச்சுப் பொறுப்புக்களை ஏற்றுக்கொண்ட அமைச்சர்கள் சிலரும் இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையில் கைச்சாத்திட்டுள்ளனர்.   இந்த அரசாங்கத்துக்கு நாம் 100 நாட்களை வழங்கினோத். போனஸ்ஸாக மேலும் 50 நாட்களையும் வழங்கினோம். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இந்த நாட்டில் மைத்திரி (கருணை) அரசாங்கமொன்றை ஏற்படுத்துவதாகக் கூறினார். ஆனால், பிரதமரோ இந்த நாட்டில் வைராக்கியமானதொரு ஆட்சியையே நடத்தி வருகிறார் என மஹிந்தானந்த மேலும் கூறினார்.