7/25/2015

| |

யாகூப் மேமனை தூக்கிலிட ஒத்திகை: ரூ.22 லட்சம் செலவில் பாதுகாப்பு ஏற்பாடுகள்

மும்பையில் 1993ம் ஆண்டு நடத்தப்பட்ட தொடர் குண்டு வெடிப்பு தாக்குதலில் தூக்கு தண்டனை பெற்றுள்ள யாகூப் மேமனை தூக்கிலிடுவதற்கான ஒத்திகை நேற்று செய்யப்பட்டது.
வரும் 30ம் தேதி யாகூப் மேமன், அவனது பிறந்த நாளன்று தூக்கிலிடப்பட உள்ளான்.
இதையடுத்து, மகாராஷ்டிர மாநில சிறைத் துறை ஐ.ஜி. மீரான் நேற்று சிறைக்கு வந்திருந்தார். விதிமுறைப்படி, யாகூப் மேமனின் உடல் எடைக்கு சமமான மூட்டை ஒன்று தூக்கு மேடையில் கட்டப்பட்டு தூக்கு தண்டனையை நிறைவேற்ற ஒத்திகை பார்க்கப்பட்டது.
யாகூப் மேமனை தூக்கிலிட சிறப்புக் கயிறு ஒன்று புதிதாக வாங்கி தயார் நிலையில் வைக்கப்பட்டது.
நாக்பூர் சிறைச்சாலையை சுற்றிலும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள ரூ.22 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.