உண்மைகள்

மறைக்கப்படும் மறுக்கப்படும் செய்திகளுக்காக...

Get The Latest News

Sign up to receive latest news

7/23/2015

| |

முகமது நபி வாழ்ந்த காலகட்டத்தைச் சேர்ந்த குரானின் கையெழுத்துப் பிரதி

உலகின் மிகப் பழைய குரான் ...இஸ்லாமியர்களின் புனித மறையான குரானின் ஆகப் பழைய எழுத்துப் பிரதியின் சில பக்கங்கள் தமது ஆவணத் தொகுப்பில் இருந்தது தெரியவந்திருப்பதாக பிரிட்டிஷ் பல்கலைக்கழகம் ஒன்றின் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
இந்த எழுத்துப் பிரதியை கார்பன் டேட்டின் முறையில் பரிசோதித்தபோது அவை ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்தவை எனத் தெரியவருகிறது.
இந்தப் பிரதியை எழுதியவர் இறைதூதர் முகமதுவை கண்டும் கேட்டும் இருந்த ஒருவராக இருந்திருப்பார் என பர்மிங்ஹாம் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
இராக்கில் பிறந்த சரித்திர ஆர்வலரான அல்ஃபோன்ஸ் மிங்கானா என்பவரால் 1920கள் காலகட்டத்தில் இந்த குரான் எழுத்துப் பிரதியின் பக்கங்கள் பர்மிங்ஹாமுக்கு கொண்டுவரப்பட்டிருந்தன.