7/24/2015

| |

மஹிந்தவை சந்திக்க வைத்த பின்னரே பிரபாகரனை கொன்றனர்: கருணா -

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனை , மஹிந்த ராஜபக்ஷவிடம் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். அவரை மஹிந்த கடுமையாக தாக்கியுமுள்ளார் என அவரது ஆட்சியில் இருந்த பிரபல அரசியல்வாதிகள் இருவர் என்னிடம் தெரிவித்தனர் என்று புலிகள் இயக்கத்தின் கிழக்கு மாகாண முன்னாள் தளபதியும் முன்னாள் பிரதியமைச்சருமான கருணா அம்மான் என்றழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.என செய்திகள் பரவி வருகின்றது. 

இந்த செவ்வி தொடர்பில் தமிழ்மிரருக்கு கருத்து தெரிவித்த விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்), 'நான் எந்தவொரு ஊடகத்துக்கும் செவ்வி வழங்கவில்லை. எனக்கு சேறு புசும் நடவடிக்கையே இது' என்றார்.