7/25/2015

| |

பொய் சொல்லும் . கூட்டமைப்பு செல்வராசா - வேட்பாளர் ஆ .ஜோர்ஜ் பிள்ளை

தமிழ்  தேசிய கூடமைப்பின்  வேட்பாளரும்  முன்னால்  பாராளுமன்ற  உறுப்பினருமான   பொன் . செல்வராசாவினால்  வெளியிட்டுள்ள  அவரது  துண்டு பிரசுரத்தில்  மட்டக்களப்பு  விமான நிலைய  விஸ்தரிப்பு  நஷ்டஈடூ கொடுப்பனவு  சுமார்  நாலரைக்கோடி  ரூபாவை பெற்று கொடுத்துள்ளதாக  அப்பட்டமான  பொய்  தகவலை  வெளியிட்டுள்ளார் 

இதனை  நான் முற்றாக  மறுக்கிறேன் . 1987 ம்  ஆண்டு  மட்டக்களப்பு  விமான  நிலைய  விஸ்தரிப்புக்காக 350 குடும்பங்கள்  வெளியேற்றப்பட்டு  அவர்களது  காணிகளும்  குடியிருப்புக்களும்  சுவீகரிக்கப்பட்டது.  பாதிக்கப்படவர்களின் நலன் கருதி   மட்டக்களப்பு  விமான  நிலைய  விஸ்தரிப்பால்  பாதிக்கப்பட்டோர்  சங்கம்  உருவாக்கப்பட்டு  சங்கத்தின்  தலைவராக  நான் செயற்பட்டேன்.

  அச்சங்கத்தின்  ஊடாக  பல  நஷ்ட   ஈடூ  கொடுப்பனவிற்காக   கோரிக்கையை  விடுத்து  இறுதியாக  நாம்  மட்டக்களப்பு  மண்முனை  வடக்கு  பிரதேச  செயலகத்திற்கு  முன்பாக  மறியல்  போராட்டத்தினை  நடத்தினோம் . இதில்  பாதிக்கப்பட்ட  அனைவரும்  கலந்தது  கொண்டனர்.  இதன் போது  பல  பாராளுமன்ற  உறுப்பினர்கள்  தங்களது  அரசியல்  லாபம்  கருதி  அவ்  இடத்திற்கு  சமூகமளித்தனர் .சுமார்  15 ஆண்டுகளுக்கு  மேலாக  பாதிக்கப்பட்ட வர்களுக்கு  நஷ்ட ஈடூ  கிடைக்க  பெறவில்லை   மட்டக்களப்பு   பாராளுமன்ற  உறுப்பினர்கள் பலர் இருந்தும்  எவ்வித  துரித  நடவடிக்கையும்  எடுக்கப்படவில்லை  எமது பாதிக்கப்படோர்  சங்கத்தின் தொடர்  போராட்டம்  காரணமாகவே   நஷ்ட  ஈடூ  கொடுப்பனவுக்கான  நடவடிக்கைகள்  மேற்கொள்ளப்பட்டது . 
 
உண்மை அப்படியிருக்க உண்மைக்கு  புறம்பான  தகவல்களை  தெரிவித்து  மக்களிடம்  வாக்குகளை  கேட்பது  அவரது  கையாலகாத  தன்மையை வெளிக்காட்டுகின்றது.  என பாராளுமன்ற      வேட்பாளரும்  தமிழ்  மக்கள்  விடுதலை  புலிகள்  கட்சியின்  பிரதி  செயலாளருமான  ஜோர்ஜ் பிள்ளை  தெரிவித்துள்ளார்.