7/03/2015

| |

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தேர்தல் குழு திங்கள் கூடுகின்றது.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் பணிக்குழுவினால் நியமிக்கப்பட்ட 2015ம் வருடத்திற்கான நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் நிலைப்பாடு தொடர்பாகவும்,வேட்பாளர் தெரிவுக்குமான குழு எதிர்வரும் 06.07.2015 திகதி கூடவுள்ளது என கட்சியின் பொதுச்; செயலாளர் பூ.பிரசாந்தன் தெரிவித்தார்.மட்டக்களப்பு,அம்பாறை,திருகோணமலை உள்ளடங்கிய கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி தனித்து படகுச் சின்னத்தில் கட்சியின் தலைவர் சி.சந்திரகாந்தன் தலைமையில் போட்டியிட வேண்டும் என கட்சியின் ஆதரவாளர்களும்,பொதுமக்களும் கோரிவரும் நிலையிலும் ஆளும் அரசும் தமக்கு அழைப்பு விடுத்துள்ள நிலையிலும் இக் குழுவின் அறிக்கையினை அடுத்து இறுதி தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாகவும் கட்சியின் பொதுச் செயலாளர் தெரிவித்தார்.