7/14/2015

| |

தமிழ் தேசியக் கூட்டமைப்பினை நாம் முற்றாக நிராகரிக்கின்றோம் -நாம் திராவிடர் கட்சி

தமிழ் தேசியக் கூட்டமைப்பினை நாம் முற்றாக நிராகரிக்கும் அதேவேளை, நாம் திராவிடர் கட்சியே அவர்களுக்கு சவாலான கட்சியாகவும் அமையும் என கட்சியின் தலைவர் கே.மோகன் தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நேற்று (13)  தமது வேட்புமனுவை தாக்கல் செய்ததன் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார். இங்கு மேலும் கூறிய அவர், யுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள தமிழ் பிரதேசங்களின் அபிவிருத்தி, இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு, விதவைகளுக்கான வாழ்வாதாரம் என்பவற்றை கருத்திற் கொண்டே நாம் இத் தேர்தலில் களமிறங்கியுள்ளோம் என்றார். மேலும், நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டம் சார்பில்  போட்டியிடுகின்ற அனைத்து கட்சிகளும் பேரினவாத கட்சிகளுடன் இரகசிய உடன் படிக்கைகளை செய்து கொண்டுதான் வந்துள்ளன. எந்தவொரு பேரினவாதக்கட்சியிலும் நாங்கள் போட்டியிடமால் தனித்துவமாக களமிறங்கியுள்ளோம். நாம் நிச்சயம் வெற்றி பெறுவோம் எனவும் அவர்; தெரிவித்தார்.