7/21/2015

| |

தமிழ் தேசிய கூட்டமைப்பு தன் தவறை நியாயப்படுத்த முடியாது.-மட்/ முன்னாள் பிரதி மேயர்

இம்முறை நாடளுமன்ற தேர்தலில் ஐ.ம.சு கூட்டமைப்பின் வேட்பாளராக களம் இறங்கியுள்ள தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் உறுப்பினரான செல்லத்துரை அரசரெத்தினம் விட்டில் நேற்று 20.7.2015 இரவு குடிபோதையில் அத்துமீறி நுழைந்து சிலர் வேட்பாளரை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்க முற்பட்ட சம்பவத்தை தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி வேட்பாளர்- ஆ.ஜோர்ஜ் பிள்ளை வண்மையாக கண்டிப்பதாக கூறியுள்ளார்.
இச் சம்பவத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளார் ஓருவரின் ஆதரவாளர்கள் சம்மந்தப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
மக்களின் செல்வாக்கு வேட்பாளர்களுக்கு அதிகரித்து வரும் வேளையில் இதைப் பொறுத்துக் கொள்ள முடியாதவர்கள் இவ்வாறான செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளார்கள்.
தங்களுக்கு மக்களின் ஆதரவு பெருவாரியாக உள்ளதாக கூறிக்கொள்பவர்கள் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுபவனை நியாயப்படுத்த முடியாது .
இச் சம்பவத்தில் ஈடுபட்ட நபர் தாக்க முற்படும் போது கையும் மெய்யுமாக வீட்டில் உள்ளவர்கள் குற்றவாளிகளை பிடித்து காத்தான்குடி பொலிஸில் ஒப்படைத்துள்ளார்கள். இச்சம்பவம் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வங்குரோத்து நிலையை காட்டுகின்றது. மக்களின் செல்வாக்கை அராஐகத்தால் பெற்றுக் கொள்ள முடியாது. என்று தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பிரதி செயலாளரும் ஐ.ம.சு கூட்டமைப்பின் வேட்பாளருமான ஆ.ஜோர்ஜ் பிள்ளை தனது கண்டன அறிக்கையில் தெரிவித்தள்ளார்.