8/18/2015

| |

129 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னாள் கிழக்கு முதல்வர் சந்திரகாந்தன் வெற்றியை தவறவிட்டார்

Résultat de recherche d'images pour "சந்திரகாந்தன்"
நாட்டின் பல மாவட்டங்களினதும் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் தேர்தல் முடிவுகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை.மட்டக்களப்பில் தெரிவாகும் 5 ஆசனங்களில் தமிழ் தேசிய கூட்டமைப்பு வெற்றிபெற்ற இரு ஆசனங்களையும் ,போனஸ் ஆசனம் ஒன்றினையும் சேர்த்து மூன்று  ஆசனங்களை பெற்றுள்ளது.ஏனைய இரு ஆசனங்களில் முஸ்லிம் காங்கிரஸ் ஒரு ஆசனத்தை பெற்றுள்ளதாக அறிய முடிகின்றது. எஞ்சியுள்ள ஒரு ஆசனத்தை பெறுவதில் ஐக்கிய தேசிய கட்சிக்கும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புக்கும் இடையே கடும் போட்டி நிலவுவதாக உள்ளக செய்திகள் தெரிவிக்கிறன.

இவ்விரு கட்சிகளும் தலா 32000 வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ள நிலையில் முன்னாள் அமைச்சர் அமீர் அலிக்கும் முன்னாள் கிழக்கு முதல்வர் சந்திரகாந்தனுக்கும் இடையில் சில நூறு வாக்கு வித்தியாசங்களே காணப்படுகின்றது. இந்நிலையில் மீண்டும் மீண்டும் வாக்குகள் எண்ணப்படுவதாலேயே மட்டகளப்பு மாவட்டத்தின் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படுவதில் தாமதம் நீடிப்பதாக உத்தியோக பற்றற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.இறுதியாக கிடைக்கின்ற தகவல்களின் அடிப்படையில்  32000 வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ள போதிலும் வெறும் 129 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னாள் கிழக்கு முதல்வர் சந்திரகாந்தன் வெற்றியை தவறவிட்டார்  என்னும் முடிவு வெளியாகலாம்.