8/09/2015

| |

ஐந்து ஆண்டு மக்கள் நல திட்டத்தில் பிள்ளையானின் வெற்றி உறுதிசெய்யப்பட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புடன் சேர்ந்து மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் ஐந்தாண்டு மக்கள் நலத்திட்டம் அக்கட்சியின் தலைவரும், முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சருமாகிய சி. சந்திரகாந்தன் தலைமையில் 07.08.2015 அன்று மு.ப 10.00 மணிக்கு செங்கலடி சீனித்தம்பி ஞாபகார்த்த மண்டபத்தில் வெளியீடப்பட்டுள்ளது. இன் நிகழ்வில் ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் கலந்து கொண்டனர்.
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கடசியின்  பொதுச் செயலாளர் பூ.பிரசாந்தன் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்ட இன் நிகழ்வில் அக் கட்சியின் தலைவாரும் முன்னாள் கிழக்கு மாகாணசபை முதலமச்சர் சி. சந்திரகாந்தன் அவர்கள் வெளியிட்ட ஐந்தாண்டு மக்கள் நலத்திட்டம்
அறிமுகம்
மாகாணங்களுக்கான பிராந்திய அரசியல் அதிகாரப் பகிர்வில் தேவைப்பாடும், நம்பிக்கையும் கொண்ட நாம் இம்முறை பாராளுமன்றப் பொதுத் தேர்தலில் போட்டியிடுகின்றோம். எமது இறுதி அரசியல் இலட்சியம் பாராளுமன்ற அதிகாரமயல்ல, எமது மக்களின் சுயநிர்ணயம் அங்கீகரிக்கப்பட்ட முழுமையான அதிகாரப் பகிர்வையே நாம் வேண்டிநிற்கின்றோம். அத்துடன் எமது பிரதேசங்களில் நிலையான அமைதியும், நீடித்த அபிவிருத்தியும் இடம் பெறவேண்டும்.
ஆறு தசாப்த கால அரசியல் பாதையில் பாராளுமன்ற அரசியல் அதிகாரத்தினூடாக தமிழினம் எவ்வித குறிப்பிடத்தக்க உரிமைகளையும் பெறவில்லை. காலத்திற்கு காலம் அரசியல் ரீதியான கொள்கைகளும், இலக்குகளும் மாற்றம் பெற்று அவைகளை அடைய மக்களிடம் ஆணை வேண்டி நின்ற கட்சிகளும், தலைவர்களும் எதனையும் பெற்றத் தரவில்லை.
1940-1949 காலப்பகுதியில் 50:50 கோரிக்கை, பின்னர் 1949ல் சமஸ்டி, 1976ல் தனி நாடு, 1981ல் சுயநிர்ணயம், 1987ல் மாகாண சபை என கொள்கைகளும், கோட்பாடுகளும் மாற்றம் பெற்று வந்தது. இந்த பாதையில் சிலர் தியாகிகளாகவும், தேசப் பற்றார்களாகவும் வேறு சிலர் துரோகிகளாகவும் வகைப்படுத்தப்பட்டனர். இதில் தியாகிகள் துரோகிகளாகவும், துரோகிகள் தியாகிகளாகவும் பரிணாமம் அடைந்ததையும் கண்டோம். இதனால் ஏற்பட்ட சகோதரப்படுகொலை, காட்டிக் கொடுப்புகள், இடம் பெயர்வுகள், புலம் பெயர்வுகள் என தமிழினம் அழிவுகளையே  தன் தடமாகக் கொண்டது. இதன் காரணமாக எமது மக்கள் அபிவிருத்தி, உட்கட்டுமானம், வாழ்வாதார முன்னேற்றம் போன்ற அனைத்தையும் இழந்து நிற்கும் நிலை எற்பட்டது.
ஆயுதப் போராட்டம் தோற்கடிக்கப்பட்டு,  அமைதி திரும்பி உள்ள நிலையில் பாரம்பரியமாக பின்பற்றப்பட்டு வந்த அரசியல் கலாச்சாரத்திலும் மாற்றம் ஏற்படவேண்டிய தேவை எழுந்து வருகின்றது. எமது மக்களின் சிந்தனைகளில் மாற்றம் தென்படுகின்றது. 
புதிய சிந்தனைகளும், கருத்துக்களும், விமர்சனங்களும் வரவேற்க்கப்படுகின்றன. அடைய முடியாத போலியான, அரசியல் இலக்குகள் நிராகரிக்கப்பட்டு புதிய பாதைகளை மக்கள் தேடத்தொடங்கியுள்ளனர். இந்த அனுகுமுறை மாற்றத்தில் யதார்த்த பூர்வமான, நடைமுறைச் சாத்தியமான கொள்கைகளையும், புதிய மாற்றீடான தலைமைகளையும் மக்கள் ஏற்றுக்கொள்ளத் தொடங்கியுள்ளனர். இம்மாற்றத்தின் வித்தாகவும், ஆரம்பப்புள்ளியாகவும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியாகிய நாமே இருக்கின்றோம் என்பதை யாரும் மறுக்க முடியாது.
மாகாணத்திற்கான அதிகாரப் பகிர்வு.
     தற்போது நடைமுறையிலுள்ள ஒற்றை ஆட்சி அரசியலமைப்பின் மூலம் முழுமையான அதிகாரப் பகிர்வையோ, இனங்களுக்கிடையே சம அந்தஸ்த்தையோ அடைய முடியாது. ஆனால் எம் அரசியல் இலக்கை அடைவதற்கான ஆரம்பப் புள்ளியாக 13வது அரசியலமைப்புச் சீர்திருத்தத்தை நாம் ஏற்றுக்கொள்கின்றோம். மாகாணசபைகளுக்கான காணி, காவற்துறை அதிகாரங்கள் முழுமையாக அமுல்படுத்தப்படவேண்டும். மாகாண சபைகளில் அங்கீகாரமின்றி முதலீடுகளுக்காகவும், பாதுகாப்புத் தேவைகளுக்காகவும் சுவீகரிக்கப்பட்ட காணிகள் மீள ஒப்படைக்கப்படல் வேண்டும். இதற்காக நாம் பாராளுமன்றத்தினூடாக போராடுவோம்.
அனைவரும் ஏற்றுக் கொள்ளக் கூடிய நிலையான அரசியல் தீர்வு, நீடித்த அமைதி.
எமது மக்களின் அரசியல் அபிலாசைகளையும், அடிப்படை உரிமைகளையும், உறுதிப்படுத்தக்கூடிய நிலையான அரசியல் தீர்வு அமையப் போகும் பாராளுமன்றத்தின் மூலம் வழங்கப்பட வேண்டும். அதில் வடக்குத் தமிழர்களின் அரசியல் எதிர்பார்ப்புக்கள், அபிலாசைகள் மாத்திரமின்றி கிழக்கு தமிழ் மக்கள், முஸ்லீம்கள், இந்திய வம்சாவழி தமிழர்கள் மற்றும் அதிகாரம் வேண்டி நிற்கின்றன தென்னிலங்கை மக்களின் எதிர்பார்ப்புகளுக்கும் ஏற்ற வகையிலும் பிரிக்கப்படாத இலங்கைக்குள் பல்லினங்களுக்கான சமஅந்தஸ்தும், சம உரிமையும், உறுதிப்படுத்தப்பட்ட அரசியல் தீர்வை காண்பதற்கான களமாக நாம் பாராளுமன்றத்தை பயன்படுத்துவோம். இதற்காக எம்முடன் ஒரே கருத்துள்ள, முற்போக்கான அரசியல் கட்சிகளுடனும்;, இடதுசாரி அமைப்புகளுடனும் இணைந்து பணியாற்றுவோம். இனவாத, மதவாத, பிரிவினைவாத அரசியலை முற்றாக ஒழித்து செயற்படுவோம். இன, மத, சமுக நல்லிணக்கத்தின் முன்மாதிரியாக கிழக்கு மாகாணத்தை மாற்றுவோம். இவைகளின் ஊடாகவே நீடித்த அமைதியையும், சக வாழ்வையும் அடைந்து கொள்ள முடியும்.
அரசியல் கைதிகளின் விடுதலை.
       பயங்கரவாதத் தடைச்சட்டம் முற்றாக நீக்கப்படுவதுடன் நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளின்; வழக்குகளை விசாரிப்பதற்கு சிறப்பு, துரித நீதிமன்றங்கள் அமைக்கப்பட வேண்டும். ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கு பாராளுமன்றத்தின் ஊடாக அழுத்தம் கொடுப்போம்.
வாழ்வாதார மேம்பாடும், வறுமை ஒழிப்பும்.
       மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழ்வாதார மேம்பாட்டிற்கு அதிக முன்னுரிமை கொடுப்பதுடன், அதனூடாக தனிநபர் வருமானத்தை அதிகரித்து வறுமையை முற்றாக ஒழிப்பதற்கான 5 ஆண்டு கால திட்டங்களை வகுத்துச் செயற்படுத்துவோம். விவசாயம், மீன்பிடி, கால்நடை வளர்ப்பை பிரதான வாழ்வாதாரமாக  கொண்ட மட்டக்களப்பு மாவட்டத்தில் நவீன தொழில்நுட்பத்தினூடாக, புதிய சந்தை வாய்ப்புகள் ஏற்படுத்துவதன் மூலமும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முன்னேற்றுவோம். நெல்லுக்கு உறுதியான உத்தரவாத விலையை நிர்ணயிப்பதுடன் அதனை அரசாங்கமே கொள்வனவு செய்ய வேண்டும். ஏனைய வேளாண் பொருட்களுக்கான சந்தைகளை விஸ்தரிப்பதுடன், விவசாயப் பொருட்களின் வெளிநாட்டு இறக்குமதியை மட்டுப்படுத்தி உள்நாட்டு உற்பத்திக்கு உரிய விலை கிடைக்கும் வகையில் பாராளுமன்றத்தில் செயற்படுவோம்.  நன்னீர், கடல்நீர், மீன்பிடித்துறைகளில் அதிக கவனம் செலுத்துவதுடன், மீன்களைப் பதப்படுத்தும் தொழிற்சாலைகளை மட்டக்களப்பு மாவட்டத்தின் பல கரையோர கிராமங்களில் அமைப்பதுடன் அதற்கான சந்தை வாய்ப்பினையும் ஏற்படுத்துவோம்.
கால்நடை வளர்ப்பில் புதிய பயிற்சிகளையும், தொழிநுட்ப வசதிகளையும் அறிமுகம் செய்வதுடன் புதிய பண்ணைகளை அமைக்க நடவடிக்கை எடுப்போம். மட்டக்களப்பு மாவட்டத்தில் சேகரிக்கப்படும் பாலை வீண்விரயமாக்காமல் அதற்குரிய விலையை பெற்றுக் கொடுப்பதுடன், அதன் முழுப்பயனும் கால்நடை வளர்ப்பாளர்களை சென்றடைவதை உறுதிப்படுத்துவோம்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்லாயிரம்  கால்நடைகள் உள்ளன. இவற்றுக்கான மேய்ச்சல் தரைக் காணிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாயினும், அது உத்தியோகப் பூர்வமாக வர்த்தமானியில் பிரசுரிக்கப்படாமையினால் அறுவடைக்காலங்களில் கால்நடை உரிமையாளர்களும், விவசாயிகளும் பெரும் சிரமத்தையும், நட்டத்தையும் எதிர்நோக்குகின்றனர். எமது கட்சித் தலைவர் கிழக்கு மாகாண முதலமைச்சராக பணியாற்றிய காலத்தில் மேய்ச்சல் தரை பிரச்சனைக்கு தற்காலிக தீர்வுகளை அமுல்படுத்தினோம். மேய்ச்சல் தரைக்காக அடையாளங் காணப்பட்ட காணிகளை மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டத்தின்; ஊடாக சட்ட பூர்வமாக்க முயற்சியை மேற்கொண்ட போதும் அரசியல் தலையீடுகள், அத்துமீறிய குடியேற்றம் காரணமாக அவை நடைமுறைப்படுத்தப்படவில்லை. அதனால் இம்முறை பாராளுமன்றம் ஊடாக உறுதியான நடவடிக்கை மூலம் மேய்ச்சல் தரைக் காணிப் பிரச்சினையை தீர்த்து வைப்போம்.
சுய தொழில் வாய்ப்புகளை அதிகரிப்பற்கு நடவடிக்கை எடுப்பதுடன் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு புதிய முதலீட்டாளர்களை வரவேற்று கைத்தொழில் பேட்டைகளை அமைத்து வேலை வாய்ப்புகளை அதிகரிக்க  நடவடிக்கை எடுப்போம். எமது கரையோரப் பிரதேசங்களில் இனங்காணப்பட்டுள்ள விலையுயர்ந்த தாதுப் பொருட்களை உரிய முறையில் பயன்படுத்துவதன் மூலம் நேரடி, மறைமுக வேலைவாய்ப்புகளை ஏற்படுத்த முடியும். 
தொழிற்பயிற்சியும், வேலைவாய்ப்பும்
பாடசாலைக் கல்வியை இடையில் கைவிட நேர்ந்த சாதாரண தரம், உயர் தரம் கல்வி பயின்ற இளைஞர், யுவதிகளுக்கு அவர்களின் தகுதிக்கும், தகைமைக்கும் ஏற்ப தொழிற் பயிற்சியை வழங்குவதுடன், அவர்களுக்கான வேலை வாய்ப்புக்களை உறுதிப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
மட்டக்களப்பில் வேலையற்ற உள்வாரி, வெளிவாரி பட்டதாரிகளை அரச துறைகளில் 5 வருடங்களில் முழுமையாக இணைத்துக் கொள்வதற்கான உத்தரவாதத்தையும் வழங்குகின்றோம்.
மீள் குடியேற்றம், வீடமைப்பு, புனருத்தானம்.
     கிழக்கு மாகாணத்தில் மீள்குடியேற்றத்தை முழுமைப்படுத்;துவதுடன், மட்டக்களப்பு மாவட்டத்தை குடிசைகள் அற்ற மாவட்டமாக 5 வருடங்களில் மாற்றுவதற்கான வேலைத் திட்டங்களை முன்னெடுப்போம்.
பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்கள், விதவைகளுக்கான விN~ட வேலைத்திட்டம்.
இதற்கென கிழக்கு மாகாணசபையுடனும், சர்வதேச தொண்டு நிறுவனங்களுடனும் இணைந்து 5 வருட வேலைத்திட்டத்தின் மூலம் அவர்களின் வாழ்வாதாரத்தினை உறுதிப்படுத்துவதுடன் அவர்களின் பிள்ளைகளுக்கு முறையான கல்வி வழங்களை உறுதி செய்வோம். இவர்களின் சமூகபாதுகாப்பை நிச்சயப்படுத்துவதுடன்;, இவர்களுக்கான வட்டியில்லா கடன் திட்டமொன்றையும் பாராளுமன்றத்தில் பிரேரிப்போம். இவர்களில் காணி இல்லாதவர்களுக்கு அரச காணிகள் பகிர்ந்தளிக்கப்படுவதுடன் அரச வீடமைப்புத் திட்டத்தில் முன்னுரிமை வழங்கப்படுவதையும் பாராளுமன்றத்தின் ஊடாக உறுதி செய்வோம். 
நீர்ப்பாசன திட்ட அபிவிருத்தி 
மட்டக்களப்பு மாவட்டத்தின் விவசாய, கால்நடை வளர்ப்பை அபிவிருத்தி செய்ய நீர்ப்பாசன அபிவிருத்தித் திட்டமொன்றை முன்மொழிந்து முன்னெடுப்போம். இதற்காக தூர்ந்துபோன குளங்களை அபிவிருத்தி செய்வதுடன், புதிய 5 வருட நீர்ப்பாசனத் திட்டங்களை முன்னெடுப்போம். கால்நடைகளின் குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக மேய்ச்சல் தரைக் காணிகளை அண்டியதாக சிறிய, நடுத்தர நீர்பாசன திட்டமொன்;றையும் பாராளுமன்றத்தில் முன்மொழிந்தும் குறித்த அமைச்சின் ஊடாக நடைமுறைப்படுத்துவோம்.
மட்டக்களப்பு மாவட்ட எல்லைப் பிரச்சனைக்கும், காணிப்பிரச்சனைக்கும் அத்து மீறிய குடியேற்றங்களுக்கும்  நிரந்தரத் தீர்வு காணல்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் நீண்ட காலமாக நிலவிவருகின்ற எல்லைப்பிரச்சனை, அத்துமீறிய குடியேற்றங்கள், நில ஆக்கிரமிப்பு போன்றவற்றினால் தமிழ், முஸ்லிம் சமூகங்களினுடைய பகையுணர்வும், வெறுப்புணர்வும் ஏற்படுகின்றது. சில அரசியல்வாதிகளும், அமைப்புக்களும் தனிப்பட்ட நலனுக்காக இவைகளை தூபமிட்டு வருகின்றன. இதனால் எமது மாவட்டத்தின் ஸ்திரத்தன்மையும், இயல்புநிலையும், சகவாழ்வும் சவாலுக்குட்படுத்தப்பட்டுள்ளது.
இவ் எல்லைப் பிரச்சினையையும், அத்துமீறிய குடியேற்றங்களையும் தடுத்து சமூகங்களுக்கிடையே சுமுகமான நிலைமையை ஏற்படுத்த பிரதேச, கிராம எல்லைகளை பழைய ஏற்பாடுகளின்படி நிரந்தரமாக நிர்ணயம் செய்ய நாம் உறுதியான நடவடிக்கை எடுப்போம். அதற்கென எல்லை நிர்ணயக் குழுவை சட்டபூர்வமாக அமைத்து நடவடிக்கை மேற்கொள்ள பாராளுமன்றத்தைக் களமாகப் பயன்படுத்துவோம்.
அரச காணிகளை ஆக்கிரமிப்பு செய்வோரையும், அதில் அத்துமீறிய குடியேற்றங்கள் அமைத்திருப்பவர்களையும் கண்டறிந்து சட்ட நடவடிக்கை எடுப்போம். அக்காணிகளை மீளப்பெற காணி அமைச்சும், மாவட்ட அரச அதிபர் பணிமனையும் இணைந்ததான வேலைத்திட்டம் ஒன்றை முன்னெடுப்பதற்கான செயற்பாடுகளை பரிந்துரைப்போம்;.  மட்டக்களப்பு மாவட்ட நகர்புறங்கள், கிராமப்புறங்களிலுள்ள காணியற்றவர்களுக்கு மிகப் பொருத்தமான,  அனைத்து அடிப்பை வசதிகளையும் கொண்ட இடங்களில் குடியிருப்பிற்காக தலா 20 பேர்ச் வீதம் அரச காணிகளைப் பெற்றுதர உத்தரவாதம் அளிக்கின்றோம். அரச,தொண்டு நிறுவனங்களின் வீடமைப்புத் திட்டத்தில் முன்னுரிமை அடிப்படையில் வீடுகளை அமைப்பதற்கு சிபாரிசுகளை மேற்கொள்வோம்.
மட்டக்களப்பு மாவட்ட வெள்ள அனர்த்த பாதுகாப்பு, வடிகாலமைப்புத் திட்டம். 
மட்டக்களப்பு மாவட்டம் தாழ்ந்த நிலப்பகுதியாக உள்ளதால் தொடர்மழை காலங்களில் வெள்ள அனர்த்தம் ஏற்படும் பகுதியாகவுள்ளது. எனவே மட்டக்களப்பு மாவட்டத்தை வெள்ள அனர்த்த அபாயமுள்ள பகுதியாக பிரகடனம் செய்து, விN~ட நிதியைப் பெற்று அதன் மூலம் நிலையான விN~ட வெள்ள அனர்த்த பாதுகாப்பு திட்டமொன்றை முன்னெடுப்போம். மட்டக்களப்பின் தாழ்நிலப் பகுதிகளில் தேங்குகின்ற மழைநீரை உடனடியாக வடிந்தோடும் வண்ணம் பரந்த வடிகால் அமைப்புத் திட்டத்தையும் நடைமுறைப்படுத்துவோம்.
வாழைச்சேனை, சித்தாண்டி, வந்தாறுமூலை போன்ற பகுதியில் தேங்குகின்ற வெள்ளநீர் வடிந்தோடுவதற்கு ஏதுவாக கிரான் பாலத்தை உயர்த்தும் நடவடிக்கையினை மேற்கொள்வோம். கால்வாய்களையும் சுத்தம் செய்வதற்கான திட்டமொன்றை முன்னெடுப்போம். குறிப்பாக வாழைச்சேனைக் கால்வாய், கொம்மாதுறை, வந்தாறுமூலையிலுள்ள சாவாறு ஆற்றையும் சுத்தம் செய்து அச் சூழலை அழகிய இடமாக மாற்றுவோம்.
அத்துடன் வெள்ள அனர்த்த காலப்பகுதியில் கிரான் பாலத்தில்  வெள்ளம் தேங்குவதனால் ஏற்படும் போக்குவரத்துத்  தடையை நிவர்த்தி செய்ய சந்திவெளி தொடக்கம் திகிலிவட்டையை இணைக்கும் பாலமொன்றை அமைப்பதற்கான நடவடிக்கையினை மேற்கொள்வோம். இதன் மூலம் வெள்ளக்காலப்பகுதியில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படாமல் இருப்பது உத்தரவாதப்படுத்துவதுடன், ஏனைய காலங்களிலும் இதன் மூலம் போக்குவரத்தினை இலகுபடுத்தலாம். 
நன்னீர், வாவிகள் அழகுபடுத்தல், பாதுகாப்புத் திட்டம்
மட்டக்களப்பு மாவட்டம் அதிகமாக நன்னீர் நிலைகளையும்,வாவிகளையும் கொண்ட பகுதியாகும். இவ் வாவிகளையும், நன்னீர் நிலைகளையும் அதிலுள்ள உயிரினங்களையும் பாதுகாக்கவும்,பராமரிக்கவும் அதிகாரசபை அஸ்தஸ்துள்ள விN~ட அரச முகவர் அமைப்பை நிறுவ பாராளுமன்றத்தில் பிரேரிப்பதுடன் அது தொடர்பான அமைச்சுடன் கலந்துரையாடி நடவடிக்கை மேற்கொள்வோம்.
நன்னீர், வாவிகளைச் சூழவுள்ள பகுதிகளை அழகு படுத்தும் திட்டமொன்றையும் முன்னெடுப்போம்.
சுகாதார மேம்பாடு
மட்டக்களப்பு மாவட்ட போதனா வைத்தியசாலையில் நவீன ஆய்வுகூடங்கள், ஆசுஐ ளஉயn இயந்திரம் நிறுவ நடவடிக்கை மேற்கொள்வதுடன்  வைத்தியர்களுக்கான நவீன வசதிகள் கொண்ட வதிவிடம், தாதியர்கள் விடுதியினையும் அமைப்பதுடன் அதனை பராமரிக்கும் திட்டத்தையும் முன்னெடுப்போம்.
கிராமப்புற மருத்துவமனைகள், சுற்றியற்கூறு மருத்துவ நிலையங்கள் போன்றவற்றை நவீன மயப்படுத்துவதுடன் போதுமான நிதியை ஒதுக்கி புதிய கட்;டடங்களையும் அமைப்போம். அத்துடன் பின்தங்கிய எல்லைப்புற கிராமங்களில் புதிய சுற்றியற்கூறு மருத்துவ நிலையங்களை அமைக்க நடவடிக்கை எடுப்போம். 
கல்வி, உயர்கல்வி, கலை இலக்கிய, பண்பாடு அபிவிருத்தி
மட்டக்களப்பின் அடையாளமாகவுள்ள கிழக்குப் பல்கலைக் கழகத்தை அபிவிருத்தி செய்வதுடன் பொறியியல்பீடம், நீரியல், கடல்சார் பொறியியல் பீடம் அமைப்பதற்கு நடவடிக்கை எடுப்போம். அத்துடன் திணைக்களகமாகவுள்ள இந்துநாகரிகத்தை தனியான பீடமாக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுப்போம்;. இதன் மூலம் கலைத்துறையை அடிப்படையாககொண்ட தமிழ் மாணவர்கள் பயன் பெறுவதுடன் எமது கலாச்சார மரபுகளையும் பேணிப் பாதுகாக்க முடியும். கிழக்கு மாகாணத்தின் வாழ்வாதாரமாகவுள்ள விவசாயம், மீன்பிடி, கால்நடை துறைகளை நவீன முறைகளின் ஊடாக அபிவிருத்தி செய்வதற்கான களமாக கிழக்குப் பல்கலைக் கழகத்தை பயன்படுத்த நடவடிக்கை எடுப்போம்.  இவை தொடர்பில் புதிய ஆய்வுகளையும், கண்டுபிடிப்புக்களையும் மேற்கொள்ள தேவையான உந்துசக்திகளாக செயற்படுவோம். அத்துடன் உயர் தொழிநுட்ப கல்வி நிறுவனங்களை மட்டக்களப்பில் மேம்படுத்த நடவடிக்கை எடுப்பதுடன் அவற்றில் சர்வதேச தரம் மிக்க நவீன தொழிநுட்ப பயிற்சிகளையும் வழங்க நடவடிக்கை எடுப்போம்.
பாடசாலைக்கல்வி அபிவிருத்தியில் அதிக ஆர்வம் காட்டுவதுடன், பாடசாலையில் நிலவும் ஆளணி பற்றாக்குறையை நீக்க போதுமான நிதியை ஒதுக்குவதுடன் அவை தொடர்பில் கிழக்கு மாகாண சபையுடன் இணைந்து விN~ட செயற்திட்ட மொன்றை முன்னெடுப்போம். வறுமைக் கோட்டின் கீழுள்ள மாணவர்களின் கல்வியையும் வருகையினையும் ஊக்கப்படுத்த  விN~ட திட்டத்தையும்  செயற்படுத்துவோம்.
எழுத்தாளர்களையும் கலை இலக்கிய செயற்பாட்டாளர்களையும் ஊக்குவிக்கும் முகமாக உதவித்திட்டங்களை செயற்படுத்துவோம்.வாசிப்புகள், நூல் வெளியீடுகள் போன்றவற்றை ஊக்கப்படுத்துவதனுடாக தமது மக்களின் அறிவு வளர்ச்சிக்கு உருதுணைபுரிவோம்  
முன்னாள் போராளிகளுக்கான மறுவாழ்வும், சமூகமயப்படுத்தலும் விN~ட தேவையுடையோருக்கான செயற்திட்டம்.
 
எம் சமூகத்திற்காக தம்மை அர்ப்பணித்து, தியாத்துடன் பணியாற்றிய முன்னாள் போராளிகளுக்கு இன்னும் உரிய சமூக அந்தஸ்தும், உரிய இடமும் வழங்கப்படாமை வேதனைக்குரியது. இதனால் அவர்களை உரிய முறையில் சமூக மயப்படுத்தவும், உரிய இடம் வழங்கவும் தகுதியான நடவடிக்கை மேற்கொள்வோம். அத்துடன் இயற்கையாகவும் யுத்ததினால் பாதிக்கப்பட்டும் விN~ட தேவையுடையவர்களுக்காகவும் அவர்களின் சுய தொழில் வாழ்வாதார, குடும்பநல திட்டங்களுக்கான அதிக நிதி ஒதுக்க ஆவன செய்வோம். அவர்களுக்கு உரிய தொழிற்பயிற்சிகளை வழங்கவும், கொடுப்பனவு வழங்கவும் முன்னுரிமை அடிப்படையில் செயற்படுவோம். 
உங்களுடன்...
 
நாம் கடந்து வந்த நீண்ட கால அரசியல் பயணத்தில் எமது இனத்திற்கு தோல்விகளும் துயரங்களும் மட்டுமே எஞ்சிக்கிடக்கின்றன. எதிர்க்கட்சி அரசியல் பாரம்பரியமே இதற்கான காரணமாகும். பாராளுமன்ற பிரதிநிதிகளின் எண்ணிக்கை  அதிகரிப்புகளினால் மட்டும் நாம் எதையுமே சாதித்து விட முடியவில்லை. உரிமைகளுக்காகப் போராடிய எம்மினம் சலுகைகள் வேண்டாம் என்கின்ற வரட்டு தனமான கோ~ங்களினால் எமது அடிப்படை உரிமைகளையும் இழந்து வந்திருக்கின்றோhம்.
காலாவதியாகிப்போன கடந்த நூற்றாண்டு சிந்தனைகள் கொள்கைகள், தேசியம் எனும் பெயரில் எமது இளைய சந்ததியினரையும், எதிர்காலத்தினையும் ஆக்கிரமித்து சீரழிப்பதை நாம் தொடந்தும் அனுமதிக்க முடியாது.
எனவே எமது மக்களை புதியதொரு, யதார்த்தபூர்வமான அரசியல் கலாச்சாரமொன்றினுள் அழைத்துச் செல்ல வேண்டிய வரலாற்றுக் கடமையில் இருந்து நாம் தவற முடியாது. வேகமாக நவீன உலகில் புதிய பாதைகளை நோக்கி நமது இளைஞர் யுவதிகள் பயணிக்க வேண்டும். அந்த மாற்றத்திற்கான தருணம் இப்போது வந்துள்ளது. 
எம் இனத்திற்கான அரசியல் உரிமைகள், சம அந்தஸ்த்து, பாதுகாப்பு, பூரணமான அதிகாரப்பகிர்வு இவற்றுடன் எம் இளைஞர், யுவதிகளுக்கான வேலைவாய்ப்புக்கள், உட்கட்டுமான அபிவிருத்தி, பொருளாதார முன்னேற்றம், வாழ்வாதார மேம்பாடு தரமான கல்வி, சுகாதார வசதிகள் என்பவற்றை பேரம்பேசி பெற்றுத்தரக்கூடிய மாற்றீடானதும் துடிப்பானதுமான தலைமைக்கான   பொறுப்பை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியினராகிய நாம் ஏற்கின்றோம்.
எனவே எமக்கு ஆணை தந்து பாராளுமன்றப் பிரதிநிதிதுவத்தின் ஊடாக இவைகளை சாதித்துக் காட்ட எமக்கொரு வாய்ப்பு தருமாறு அன்புடன் வேண்டிநிற்கின்றோம்.
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி.