உண்மைகள்

மறைக்கப்படும் மறுக்கப்படும் செய்திகளுக்காக...

Get The Latest News

Sign up to receive latest news

8/13/2015

| |

தமிழரை தெரிவு செய்ய வேண்டும்: அரசரெத்தினம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆளுங்கட்சியிலிருந்து தமிழர் ஒருவரை அபிவிருத்தி குழுத்தலைவராக தெரிவு செய்யும் வாய்ப்பை ஏற்படுத்துவதனால் இம் மாவட்டத்தில் பல அபிவிருத்தி பணிகளை முன்னெடுக்க முடியும் என மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர் செ.அரசரெத்தினம் தெரிவித்தார். மட்டக்களப்பு, தாழங்குடவில் செவ்வாய்கிழமை (11) இரவு இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு பேசுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து பேசுகையில், மட்டக்களப்பு மாவட்டத்தில் அபிவிருத்தி குழுத் தலைவராக தமிழர்கள் தெரிவு செய்யப்படவில்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உரிமையைப் பெறவேண்டும் என்று பேசிக் கொண்டு எதிர்க்கட்சி வரிசையில் இருந்து வருகின்றனர்.
இதனால் முஸ்லிம் தலைமைகள் ஆளும் அரசாங்கத்துடன் இணைந்து கொண்டு அமைச்சுப் பதவியையும் பெற்று அபிவிருத்திக்குழுத் தலைவராகவும் இருந்து பல அபிவிருத்திகளை செய்து வருகின்றனர். இதனால் 74 சதவீதத்துக்கும் மேல் வாழும் தழிழர்கள் கல்வி,பொருளாதாரம், கட்டுமானம் அனைத்திலும் பின்னடைவைச் சந்தித்துவருகின்றோம். இந்நிலை மாற்றப்பட்டு நடைபெறும் பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் தமிழர் ஒருவர் தெரிவுசெய்யப்பட்டு அபிவிருத்திகளை செய்ய வேண்டும் இதற்காக தமிழ் மக்கள் வாக்களிக்க வேண்டும் என்றார்