9/18/2015

| |

உடனடி மறுசீரமைப்புக்கான 20 யோசனைத் திட்டங்களை மக்கள் விடுதலை முன்னணி முன்வைத்துள்ளது

உடனடி மறுசீரமைப்புக்கான 20 யோசனைத் திட்டங்களை மக்கள் விடுதலை முன்னணி முன்வைத்துள்ளதுநிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை முழுமையாக நீக்குதல் உள்ளிட்ட உடனடி மறுசீரமைப்புக்கான 20 விடயங்கள் உள்ளடங்கிய யோசனைத் திட்டமொன்றை மக்கள் விடுதலை முன்னணி இன்று முன்வைத்தது.
இதன்போது, மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க, தொழில்சார் நிபுணர்கள், கலைஞர்கள் உள்ளிட்ட சிலர் கலந்துகொண்டிருந்தனர்.
கட்சி தாவுகின்றவர்களின் பாராளுமன்ற உறுப்புரிமை இரத்தாகும் வகையிலான சட்ட மறுசீரமைப்பு இந்த யோசனைத் திட்டத்தில் இரண்டாவதாக இடம்பெற்றுள்ளது.
அத்துடன், அமைச்சர்களின் எண்ணிக்கை 30 ஆகவும், பிரதியமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களின் எண்ணிக்கை 40 ஆகவும் முன்மொழியப்பட்டுள்ளதுடன், அந்த எண்ணிக்கைகளை அதிகரிப்பதற்கான 19
ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தில் காணப்படுகின்ற வழிவகைகளை நீக்குதல் மக்கள் விடுதலை முன்னணியின் மூன்றாவது அரசியலமைப்பு மறுசீரமைப்பு யோசனையாகும்.
பலவித அரசியல் கலாசார பிரதிநிதித்துவத்திற்கு இடமளிக்கும் வகையிலான புதிய தேர்தல் முறையொன்றை அறிமுகப்படுத்தல், தகவலறியும் சட்டம், தேசிய கணக்காய்வு சட்டம் போன்ற சட்டங்களை நிறைவேற்றுதல் தொடர்பிலும் முன்னணியின் யோசனைத் திட்டத்தில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.