9/10/2015

| |

விபத்தில், ஜனாதிபதி


விபத்தில், ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவின் அதிகாரிகள் பலி

Résultat de recherche d'images pour "ஜனாதிபதி"மினுவாங்கொடை, யகோடமுல்ல எனும் இடத்தில் இடம்பெற்ற விபத்தில், ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவின் அதிகாரிகள் நால்வர் உயிரிழந்துள்ளதாகவும் சிலர் படுகாயங்களுக்குள்ளாகியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் இன்று வியாழக்கிழமை (10) காலை இடம்பெற்றுள்ளது. மினுவாங்கொடை-கொழும்பு பிரதான வீதியில், டிபென்டர் ரக வாகனம் ஒன்றும் இரண்டு தனியார் பஸ்களும் மோதிக்கொண்டதாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தில் படுகாயமடைந்தவர்கள் மினுவாங்கொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக கம்பஹா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். இந்த டிபென்டர் ரக வாகனம் ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவுக்கு சொந்தமானது என்றும் தெரிவிக்கப்படுகின்றது.