உண்மைகள்

மறைக்கப்படும் மறுக்கப்படும் செய்திகளுக்காக...

Get The Latest News

Sign up to receive latest news

9/16/2015

| |

உதயன் பத்திரிகை அவதூறு வழக்கில் தண்டம் கட்டியது

உதயன் பத்திரிகை உரிமையாளர், பிரதம ஆசிரியருக்கு எதிராக வழக்கு செலவு உத்தரவு !
16.09.2015 - புதன்கிழமை
உதயன் பத்திரிகைக்கு எதிராக ஈ.பி.டி.பி. செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தொடுத்திருந்த அவதூறு வழக்கு நேற்று தொடர் விசாரணைக்கு வந்திருந்தபோதே மேற்படி உத்தரவை யாழ் மாவட்ட நீதிபதி திரு கஜநிதிபாலன் விடுத்திருந்தார்.
மேற்படி வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது உதயன் பத்திரிகையை பிரதிநிதித்துவப்படுத்தும் சட்டத்தரணி சுமந்திரன் வெளிநாடு சென்றிருந்த காரணத்தால் வழக்கைத் தவணையிடுமாறு உதயன் பத்திரிகை சார்பாக மன்றில் தோன்றியிருந்த சட்டத்தரணி துளசி தர்மகுலசிங்கம் விண்ணப்பித்திருந்தார்.
இந் நிலையில் ஈ.பி.டி.பி. செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவைப் பிரதிநிதித்துவப்படுத்தியிருந்த சட்டத்தரணி ரெங்கன் தேவராஜன் மேற்படி விண்ணப்பம் காரணமாக தனது கட்சிக்காரருக்கு ஏற்பட்ட வழக்குச் செலவை உதயன் பத்திரிகை உரிமையாளரும், பிரதம ஆசிரியரும் வழங்கவேண்டும் என கோரியபோது அதனை ஏற்றுக்கொண்ட மன்று நேற்றைய வழக்குச் செலவாக ரூபா பதினைந்தாயிரத்தை ஈ.பி.டி.பி. செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவிற்கு வழங்குமாறு கட்டளையிட்டு வழக்கை வரும் மார்கழி மாதத்திற்கு தவணையிட்டிருந்தார்.