9/06/2015

| |

"தேசிய இனப் பிரதேச தன்னாட்சி அமைப்பு முறையின் வெற்றிகரமான நடைமுறை" வெள்ளையறிக்கை

திபெத்தில் "தேசிய இனப் பிரதேச தன்னாட்சி அமைப்பு முறையின் வெற்றிகரமான நடைமுறை" என்னும் வெள்ளையறிக்கையை சீன அரசவை செய்தி அலுவலகம் 6ஆம் நாள் வெளியிட்டது. இவ்வமைப்பு முறையை நடைமுறைப்படுத்துவதால் திபெத்தில் ஏற்பட்டுள்ள தலைகீழான மாற்றம் இவ்வறிக்கையறிக்கையில் பன்முகங்களிலும் விவரி்க்கப்பட்டுள்ளது. இன்றைய திபெத், அதன் வரலாற்றில் மிக செழிப்பான காலக் கட்டத்தில் நுழைந்துள்ளது என்று இந்த அறிக்கை கூறுகின்றது.
தேசிய இன பிரதேச தன்னாட்சி அமைப்பு முறை, பல இனங்களைக் கொண்ட சீனாவின் அடிப்படை நிலைமை மற்றும் திபெத் உள்ளூர் நிலைமைக்குப் பொருந்தியதாக உள்ளது என்று இவ்வெள்ளையறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.