9/30/2015

| |

செவ்வாய் கிரகத்தில் நீர் படிமங்கள்

செவ்வாய் கிரகத்தில் நீர் படிமங்கள்சிவப்பு கிரகம் என அழைக்கப்படும் செவ்வாய் கிரகத்தை பற்றி அமெரிக்கா தீவிரமாக ஆராய்ச்சி நடத்தி வருகிறது. இதற்காக அமெரிக்கா ஏற்கனவே அங்கு அனுப்பி வைத்த விண்கலங்கள் மேற்கொண்ட ஆய்வின் மூலம், செவ்வாய் கிரகத்தில் நீர் படிமங்கள் இருப்பதற்கான ஆதாரங்கள் கிடைத்தன.
இந்தியா அனுப்பி வைத்த மங்கள்யான் விண்கலமும் செவ்வாய் கிரகத்தை சுற்றியபடி ஆய்வு செய்து புகைப்படங்களையும் தகவல்களையும் அனுப்பி வைத்துள்ளது. அதன் மூலமும் செவ்வாய் கிரகத்தில் பனிக்கட்டி வடிவத்தில் தண்ணீர் படிமங்கள் இருப்பதாக தெரியவந்து இருக்கிறது.
செவ்வாய் கிரகத்தை பற்றி ஆராய அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ‘நாசா’ ஏற்கனவே ரெகன்னாய்சன்ஸ் ஆர்பிட்டர் என்ற விண்கலத்தை அனுப்பி வைத்துள்ளது.
அந்த விண்கலம் கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் செவ்வாய் கிரகத்தை சுற்றியபடி புகைப்படங்கள் எடுத்து பூமிக்கு அனுப்பி வைத்துள்ளது.
அந்த புகைப்படங்களை ஆய்வு செய்த விஞ்ஞானிகள், செவ்வாய் கிரகத்தில் வெப்பம் நிலவும் காலத்தில் சில தாழ்வான பகுதிகளில் தண்ணீர் ஓடியதற்கான ஆதாரங்கள் கிடைத்துருப்பதாக நேற்று தெரிவித்தனர்.
அதாவது செவ்வாய் கிரகத்தில் கோடை காலம் நிலவும் போது அந்த இடத்தில் தண்ணீர் ஓடியதும், குளிர் காலத்தில் அந்த தண்ணீர் உறைந்து காணப்படுகிறது என்றும் தெரிவித்தனர்.
உறைந்த தண்ணீரின் அடியில் உப்புப்படிமங்கள் காணப்படுவதாகவும் அவர்கள் கூறினர்.
உயிர்கள் வாழ்வதற்கு தண்ணீர் முக்கிய ஆதாரம் ஆகும். செவ்வாயில் தண்ணீர் ஓடியதற்கான உறுதியான ஆதாரம் கிடைத்திருப்பதால், அடுத்த கட்டமாக அங்கு உயிர்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளனவா என்பது பற்றிய ஆய்வில் மும்முரமாக ஈடுபடவுள்ளனர்.