9/07/2015

| |

முஸ்லிம் காங்கிரசுடன் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆட்சியமைத்த லட்சணம் இதுதானா?

மட்டக்களப்பு மாவட்டத்திலே யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட அதிக பாடசாலைகள் இருக்கும்போது அமெரிக்க உதவியுடன் அபிவிருத்திசெய்ய முஸ்லிம் பாடசாலைகள் அதிகளவில் தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன் நிதியொதுக்கீடும் அவற்றுக்கு அதிகளவில் செய்யப்பட்டுள்ளது. இந்த செயற்பாடு கிழக்கு மாகாணசபையின் இனவிரோத செயற்பாடாகவே பார்க்க வேண்டியுள்ளது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா தெரிவித்தார்.

USA யின் நிதியில் இருந்து கிழக்கு
மாகாணத்தில் 8 பாடசாலைக்கு 430.02 மில்லியன் ரூபா கிழக்கு மாகாணமுதலமைச்சர் நஸீர் ஹாபிஸ் அவர்களின் பெருமுயற்சியால் பகிர்ந்தளிக்கப்பட்டடுள்ளன. இதில் ஒரேயொரு தமிழ்பாடசாலை மட்டுமே தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன் சிங்களப்பாடசாலைகள் புறக்கணிக்கப்பட்டுள்ளது.
பாடசாலைகள்:
01. அட்டாளைச்சேனை - அந்-நூர் மகாவித்தியாலயம்.
02.ஏறாவூர் – அப்துல் காதர் வித்தியாலயம்.
03.கல்முனை- வெஸ்லி உயர்பாடசாலை,
04.சாய்ந்தமருது - காரியப்பர் வித்தியாலயம்.
05.காவத்தமுனை – அல்-அமீன் வித்தியாலயம்.
06.காத்தான்குடி -பதுரியா வித்தியாலயம்.
07.சம்மாந்துறை - தாறுஷலாம் மகாவித்தியாலயம்.
08.நிந்தவூர் -அல்-மஷ்ஹர் வித்தியாலயம்.
வெஸ்லி உயர்பாடசாலை மட்டுமே தமிழ் பாடசாலை. 430.02 மில்லியன் ரூபாயில் 32மில்லியன் ரூபாய் மட்டுமே குறிப்பிட்ட தமிழ் பாடசாலைக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் முன்னாள் முதலமைச்சரை துரத்திவிட்டு முஸ்லிம் காங்கிரசுடன் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆட்சியமைத்த லட்சணம் இதுதானா என்று மட்டகளப்பு புத்தியீவிகள் விசனம் தெரிவிக்கின்றனர்.