9/22/2015

| |

மலையக மக்கள் பிரச்சினை பற்றி ஐ.நா சபையில் உரையாற்றும் திலகர் எம்பி

ஐக்கிய அமெரிக்காவில் இடம்பெறும் ஐக்கிய நாடுகள் கூட்டத்தொடருடன் இணைந்த மாநாட்டில் பங்கு கொள்ளும் நோக்கமாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் தொழிலாளர் தேசிய முன்னணியின் செயலாளர் நாயகமுமான எம்.திலகராஜ் நியூயோர்க் சென்றுள்ளார். 

´புத்தாயிரமாம் ஆண்டு அபிவிருத்தி இலக்குகளாக இருந்த சர்வதேச அபிவிருத்தி சார்ந்த நடைமுறைகளை மேலும் விரிவுபடுத்தி நிலைத்து நிற்கும் அபிவிருத்தி இலக்குகளாக´ திட்டமிடும் மாநாட்டில் இலங்கையில் இருந்து பாராளுமன்ற உறுப்பினராக கலந்து கொள்ளும் எம்.திலகராஜ் ´நிலைத்து நிற்கும் அபிவிருத்தி இலக்குகளை´ நிர்ணயம் செய்யும் போது இலங்கை, குறிப்பாக மலையக மக்கள் சார்ந்து எவ்வாறான இலக்குகள் அடையப்படல் வேண்டும் என்பது தொடர்பாக 22ம் திகதி நடைபெறும் மாநாட்டில் உரையாற்றுகிறார்.

இந்த மாநாட்டில் இந்தியா, நேபாளம், பங்களாதேஷ், பாகிஸ்தான் உள்ளிட்ட தென்னாசிய நாடுகளின் பாராளுமன்ற உறுப்பினர்களும், சிவில் சிவில் சமூக பிரதிநிதிகளும், ஐ.நா வதிவிடப்பிரதிநிதிகளும் கலந்துகொள்கின்றனர்.

செப்டெம்பர் 28ம் திகதிவரை நடைபெறவுள்ள இந்த மாநாட்டின் பல்வேறு அமர்வுகளிலும் கலந்துகொண்டு மலையக மக்கள் தொடர்பில் பரப்புரை செய்வதற்கும் பாராளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ் திட்டமிட்டுள்ளதாக தெரியவருகிறது.