10/13/2015

| |

கொழும்பில் மகுடம்( பிரமிள் சிறப்பிதழ்) அறிமுகவிழா


கலை இலக்கிய ஊடக நண்பர்கள் ஏற்பாட்டில் 11- 10- 2015 ஞாயிறு காலை 10.30 மணிக்கு கொழும்பு தமிழ் சங்கத்தில் நடைபெற்றது. 
மகுடம் (பிரமிள் சிறப்பிதழ்) அறிமுகவிழா நிகழ்வில்
முன்னிலை வகித்த: இலக்கியப் புரவலர்அல்லாஜ் ஹாசிம் உமர் அவர்களுக்கு மகுடம் பிரமிள் சிறப்பிதழ் பிரதியை ஆசிரியர் வி.மைக்கல் கொலின் வழங்கினர். 
தலைமையுரையை   பிரபல எழுத்தாளர் பதுளை சேனாதிராஜாஆற்றினார்.
 அந்தனிஜீவா ( ஆசிரியர் - கொழுந்து ) சிறப்பிதழை  அறிமுகம்செய்துவைக்க 
கருத்துரையை   மூத்தஎழுத்தாளர் மு. சிவலிங்கம்
எழுத்தாளர் கீத்தா கணேஷ்
கவிஞர் மேமன்கவி, ஈழவாணி போன்றோர் வழங்கினர்.
நிகழ்வில்  மூத்த எழுத்தாளர் மு.பொ கலாநிதி ரவீந்திரன், தம்பு சிவா , வதிரி சி.ரவீந்திரன், இரா.சடகோபன், ஈழ பாரதி நிக்சன் , எழுத்தாளர் ராஜாஜி ராஜகோபாலன்( கனடா), மற்றும் பலர்.....கலந்துகொண்டனர்.