10/20/2015

| |

அக்னி ஏவுகணையை தடுக்க அமெரிக்கா சதி

முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் தலைமை யிலான விஞ்ஞானிகள் குழு தயாரித்த அக்னி ஏவுகணையை செலுத்தி சோதனை செய்வதை தடுக்க அமெரிக்கா கடும் அழுத்தம் தந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்திய ஏவுகணை தொழில் நுட்பத்தின் தந்தை யாக கருதப்படும் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் கடைசியாக எழுதிய புத்தகங்களில் ஒன்றான அட்வான்டேஜ் இந்தியா: பிரம் சேலஞ்ச் டு ஒப்பர்சுனிட்டி விரைவில் விற்பனைக்கு வரவுள் ளது. அப்புத்தகத்தில் கலாம் கூறியுள்ளதாவது: என் தலைமையிலான விஞ்ஞானிகளின் நீண்டகால ஆராய்ச்சிகளின் பலனாக அக்னி ஏவுகணை உரு வானது.
 1989 மே 22ல் ஏவுகணையை செலுத்த திட்டமிட்டிருந்தோம். அன்றைக்கு அதிகாலை 3:00 மணிக்கு அப்போதைய பிரதமர் ராஜpவின் கெபினட் செயலர் டி.என்.சே'னிடமிருந்து ஹொட்லைன் அழைப்பு வந்தது.
அக்னி ஏவுகணை செலுத்தும் பணி எந்த கட்ட த்தில் உள்ளது? என சே'ன் கேட்டார்.
தொடர்ந்து பேசிய சே'ன் ஏவுகணை சோத னையை தாமதப்படுத்துமாறு அமெரிக்கா மற்றும் நேட்டோ எனப்படும் வடக்கு அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பிடமிருந்து கடும் அழுத்தம் தரப்படுகிறது என்றார். பின் முதலில் எழுப்பிய கேள்வியை மீண்டும் அழுத்தமாக கேட்டார்.
சே'னின் கேள்வி மிகக் கடினமான ஒன்றாக இருந்தது. அடுத்த சில வினாடிகளில் என் சிந்த னை ஓட்டம் பன்மடங்காகி இருந்தது. 10 ஆண்டு களுக்கு முன் கவனமாக தேர்வு செய்யப்பட்ட துடிப்பான இளம் விஞ்ஞானிகளின் அயராத கடின உழைப்பு வீணாகி விடுமோ என்ற கவலை என்னை வாட்டியது.
என் மன ஓட்டத்தை அலசி ஆராய்ந்து ஏவுக ணை செலுத்தும் திட்டத்தை நிறுத்த முடியாது. அதற்கான காலம் கடந்து விட்டது என சே' னுக்கு பதில் அளித்தேன். இதைக் கேட்டு சே'ன் விவாதம் செய்வார் என எதிர்பார்த்தேன். ஆனால் ஆச்சரியம் தரும் வகையில் ஓகே ஏவுகணையை செலுத்துங்கள் என சொல்லிவிட்டு ஹொட்லைன் இணைப்பை துண்டித்தார்.
மூன்று மணி நேரம் கழித்து திட்டமிட்டபடி அக்னி வெற்றிகரமாக பாய்ந்து இலக்கை தாக்கியது. இந்தியா புதிய சரித்திரம் படைத்தது. இவ்வாறு அப்துல் கலாம் எழுதிய புத்தகத்தில் கூறப்பட்டுள்ளது.