உண்மைகள்

மறைக்கப்படும் மறுக்கப்படும் செய்திகளுக்காக...

Get The Latest News

Sign up to receive latest news

10/12/2015

| |

காத்தான்குடியில் குண்டு வெடிப்பு

புதிய காத்தான்குடி ஆறாம் குறிச்சி அப்துல் லத்தீப் சின்னலெவ்வை மாவத்தையில்  குப்பைக்குள் கிடந்த குண்டொன்று இன்று திங்கட்கிழமை வெடித்ததில், முகம்மட் இஸ்மாயில் இர்ஸாத் (வயது 33) என்ற குடும்பஸ்தர் படுகாயமடைந்துள்ளதாக காத்தான்குடிப் பொலிஸார் தெரிவித்தனர். இதில் படுகாயமடைந்தவர் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.   தனது வீட்டுடன் அண்மித்த வளவில்; காணப்பட்ட குப்பைகளைக் கூட்டி தீ வைத்தபோது இக்குண்டு வெடித்துள்ளது. இந்தக் குண்டு கிரேனைட் எனப்படும் கைக்குண்டாக இருக்கலாமெனவும் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். -