உண்மைகள்

மறைக்கப்படும் மறுக்கப்படும் செய்திகளுக்காக...

Get The Latest News

Sign up to receive latest news

10/06/2015

| |

பயணத்தின் நடுவில் மரணித்த விமானி

அமெரிக்காவின் போனிக்ஸிலிருந்து பொஸ்டன் நோக்கிப் பறந்துகொண்டிருந்த அமெரிக்கன் எயார்லைன்ஸ் விமானத்தின் தலைமை விமானியொருவர் மரணமடைந்துள்ளார். எனினும், துணை விமானியின் சாதுரியத்தால், பாதிப்புகள் எவையுமின்றி விமானம் பாதுகாப்பாகத் தரையிறங்கியது. விமானிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதைத் தொடர்ந்து, அவசர மருத்துவ சேவையை அழைத்த துணை விமானி, நியூ யோர்க்கிலுள்ள சிராகியூஸில் விமானத்தைத் தரையிறக்கினார். பதற்றமான சூழ்நிலையில் அமைதியுடன் செயற்பட்ட துணை விமானி, 147 பயணிகளுடன் பயணித்த அவ்விமானத்தைப் பாதுகாப்புடன் தரையிறக்கியமைக்காகப் பாராட்டப்படுகிறார். மரணமடைந்த விமானி, 57 வயதான மைக்கல் ஜோன்ஸ்டன் என அடையாளங் காணப்பட்டுள்ளார். 25 வருடங்களுக்கும் மேற்பட்ட விமாமனப் பறப்பு அனுபவத்தைக் கொண்ட ஜோன்ஸ்டன், 2006ஆம் ஆண்டில் மாற்றுவழி இதய அறுவைச் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டிருந்தாக அறிவிக்கப்படுகிறது.