10/06/2015

| |

முன்னாள் அமைச்சர் ஜனக பண்டார கைது

1999ஆம் ஆண்டு இடம்பெற்ற கொலையுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜனக பண்டார தென்னகோன், குற்றப் புலனாய்வு பிரிவினரால் இன்று (06) கைது செய்யப்பட்டுள்ளார்.
 
கொழும்பு தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை எடுத்துக்கொண்டிருந்த போதே இவர் கைது செய்யப்பட்டார் என ஜனக பண்டார தென்னகோனின் மகன் பிரமித பண்டார தெரிவித்துள்ளார்.
தற்போது பொலிஸ் பாதுகாப்பில் குறித்த வைத்தியசாலையில் அவர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றார்