உண்மைகள்

மறைக்கப்படும் மறுக்கப்படும் செய்திகளுக்காக...

Get The Latest News

Sign up to receive latest news

10/21/2015

| |

அரியானா மாநிலம் :தலித் குழந்தைகள் பலி உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டு உள்ளனர்.

அரியானா மாநிலம் :தலித் குழந்தைகள் பலி பாதிக்கபட்ட குடும்பத்திற்கு ராகுல் காந்தி நேரில் ஆறுதல்
Résultat de recherche d'images pour "brule enfant"
அரியானா மாநிலம் பரிதாபாத்தில்  உயர் பிரிவினரால், தலித் பிரிவை சேர்ந்த ஜிதேந்தரின் குடும்பத்தில் உள்ள 2 குழந்தைகள் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டு உள்ளனர்.  இந்த சம்பவத்தில் 4 பேரை போலீஸ்  கைது செய்துள்ளனர். இதுவரை 7 போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். மேலும் இந்த சம்பவம் குறித்த விசாரணைக்காக தனிகுழு அமைக்கப்பட்டுள்ளதாக ஹரியானா மாநில ஏடிஜிபி முகமது  அகில் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, இந்த சம்பவம் குறித்து அறிக்கை அளிக்க உத்தரவிட்டுள்ள மத்திய அரசு, பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று தெரிவித்தது. இந்நிலையில், ஜிதேந்தரின் வீட்டின் அருகே போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அரியானா மாநில அரசு பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் நிவாரண தொகை அறிவித்துள்ளது.

மேலும் அந்த பகுதியில் 7 போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளதாக அகில் தெரிவித்தார். அப்பகுதியில் முன்னதாக பாதுகாப்பு பணியில்  இருந்து 3 போலீசார் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தகவல் அளித்துள்ளார்.

உள்ளூர் மக்களின் எதிர்ப்புகளுக்கிடையே காங்கிரஸ் கட்சி துணைத் தலைவர் ராகுல்காந்தி பாதிக்கப்பட்ட ஜிதேந்தரின் குடும்பத்தினரை இன்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.