10/24/2015

நேற்றைய கதையே தெரியாது புரட்சிகர அரசியல் பேசும் மாபியா ஊடகம் "இனியொரு"

முன்னாள் கிழக்கு முதல்வர் சந்திரகாந்தனின் கைது தொடர்பாக புகலிட மாபியா ஊடகங்கள் தங்கள் வாய்க்கு வந்தபடி கற்பனை கதைகளை தங்கள்மன விகாரங்களுக்கு வாய்த்தால் போல வெளியிட்டு வருகின்றன.மைத்திரிக்கு தற்கொலை குண்டு தாக்குதல் பிள்ளையான் நிகழ்தினாராம்.என்று எழுதப்படுகின்றது.

கிழக்கு போராளிகள் தமிழீழ விடுதலை புலிகளில் இருந்து பிரிந்த போது வெருகல் படுகொலை போன்ற மாபெரும் படுகொலைகளை எதிர் கொள்ள நேரிட்டது.அதன் காரணமான  தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் தங்கள் பாதுகாப்புக்காக வன்னி புலி பயங்கரவாதிகளுக்கு  எதிராக ஆயுதங்களை பயன்படுத்த வேண்டிய தேவை எழுந்தது. இதுபற்றிய உள்நாட்டு,சர்வதேச மனித உரிமை  அறிக்கைகளில் "தமிழ் மக்கள் விடுதலை புலிகள்" தற்கொலை படைகளை வைத்திருந்தார்கள் என்று ஒருபோதும் பதிவாகவில்லை.ஆனால் அவர்களுக்கெல்லாம் தெரியாத தற்கொலை படையை பிள்ளையான் வைத்திருந்தார் என்று இந்த மாபியா ஊடகங்கள் கதை விடுகின்றன.

அத்தோடு "இனியொரு" என்று வெளிவரும் ஒரு மாபியா ஊடகம்  "தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் ரி 56 ரக துப்பாக்கியைப் பயன்படுத்திக் கொலை செய்யப்பட்டதாகவும், ராஜன் சத்தியமூர்த்தியைப் பாராளுமன்ற உறுப்பினராக்கும் நோக்கத்துடனேயே இக் கொலை நடத்தப்பட்டதாகவும் ஆனல் ராஜன் சத்தியமூர்த்தி  புலிகளால் கொலை செய்யப்பட்டுவிட்டதாகவும் பிள்ளையான் தெரிவித்துள்ளார்".என கோமாளித்தனமான் செய்தியொன்றை வெளியிட்டுள்ளது.(இந்த பந்தியில் உள்ள தகவல் பிழைகள் மட்டுமல்ல எழுத்து பிழைகளும் அவர்களுக்கே உரியது)


இந்த மாபியா ஊடகம் "இனியொரு"வுக்கு நேற்று நடந்த வரலாறே  தெரியாமல் பினாத்துகிறது.ராஜன் சத்தியமூர்த்தியை எம்பியாக்கவே ஜோசப் பரராசசிங்கம் கொல்லப்பட்டாராம்  ஆகா-----நாட்டில நடக்கின்ற நேற்றைய கதையே தெரியாது புரட்சிகர அரசியல் பேசும் மாபியா ஊடகம் இனியொரு எவ்வளவு புண்ணாக்குத்தனமாக கட்டுரைகளை எழுதுகிறது என்று பாருங்கள். 

மக்களிலும் அரசியலிலும் உண்மையான அக்கறை கொண்ட அனைவருக்கும் இந்த சம்பவங்கள் ஒருபோதும் மனதை விட்டகலாதவை.ஆனால் நாட்டு மக்களில் இருந்து வெகுதூரம் விலகி வெளிநாட்டு அறைகளுக்கும் இருந்துகொன்று கணணி புரட்சிபண்ணும் இனியொரு போன்ற இந்த வேடதாரிகளுக்கு இவையெல்லாம் வெறும் பிழைப்புவாதங்கள் ஆகும். 

தமிழ் தேசிய கூட்டமைப்பு வேட்பாளர் ராஜன் சத்திய மூர்த்தி கிழக்கு பிளவு அறிவிக்கப்பட்ட ஒரு மாதத்துக்குள்ளேயே அதாவது 2004 மார்ச் மாத இறுதியில் வன்னிபுலிகளால் கொல்லப்பட்டார்.கிங்ஸ்லி இராசநாயகம் 
தேர்தல் முடிந்த பின்னர் வெற்றியீட்டி, அதாவது கிழக்கு பிளவு நடந்து ஆறு மாதங்களுக்கு பிறகு கொல்லப்பட்டார்.ஆனால் ஜோசேப் பரராசசிங்கமோ 2005ஆம் ஆண்டு சுமார் ஒன்றரை வருடங்கள் எம்பியாக இருந்த பின்னனரே அதாவது கொல்லப்பட்டார்.

ஆனால் இனியோருவோ கொல்லப்பட்டு ஒன்றரை வருடங்களாகிபோன இராஜன் சத்திய மூர்த்தியை   எம்பியாக்க பிள்ளையான் ஜோசேப் பரராசசிங்கத்தை கொன்றார் என்று கதையளக்கின்றது. இதிலிருந்து இவர்களின் செய்திகள், கட்டுரைகளின் போலி முகங்கள் இலகுவாக அம்பலமாகி விடுகின்றன.இவர்களை எண்ணி நாம் அனுதாபப்டுவதை தவிர வேறு என்ன செய்யமுடியும்.

மீன்பாடும் தேனாடான் 

http://inioru.com/mahinda-contracted-pillaiyan-to-kill-maithree/

0 commentaires :

Post a Comment