10/11/2015

| |

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சந்தேகத்தின் பெயரில் தடுத்து வைத்து விசாரிப்பு

Résultat de recherche d'images pour "pillayan"இலங்கையில் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவருமான பிள்ளையான் என்கின்ற சிவநேசத்துரை சந்திரகாந்தன் சந்தேகத்தின் பெயரில் தடுத்து வைத்து விசாரிக்கப்படுகின்றார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைக்காக கொழும்பிலுள்ள குற்றப்புலனாய்வு பிரிவுக்கு சென்றிருந்தபோதே பிள்ளையான்  தடுத்து வைத்து விசாரிக்கப்படுகின்றார். என காவல்துறை தெரிவித்துள்ளது.