உண்மைகள்

மறைக்கப்படும் மறுக்கப்படும் செய்திகளுக்காக...

Get The Latest News

Sign up to receive latest news

10/09/2015

| |

ஜோசப் பரராஜசிங்கம் கொலை தொடர்பாக இருவர் சந்தேகத்தின் பேரில் கைது

தேவாலயத்திற்குள் கொல்லப்பட்ட பரராஜசிங்கம்இலங்கையில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை தொடர்பாக முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரான பிரதீப் மாஸ்டர் எனப்படும் எட்வின் சில்வா கிருஸ்ணானந்தராஜா மற்றும் கஜன் மாமா எனப்படும் ரெங்கசாமி கனகநாயகம் ஆகிய இருவரை கைது செய்துள்ளதாக காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.
சந்தேக நபர்களான இந்த இருவரையும் 90 நாட்கள் தடுத்து விசாரணை செய்ய குற்றப்புலனாய்வுத் துறையினருக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இவர்கள் இருவரும் முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்கள் என்று காவல்துறையின் ஊடகப்பேச்சாளரான ருவன் குணசேகர தெரிவித்தார்.