10/27/2015

கண் கெட்ட பிற சூரிய நமஸ்காரம் செய்யும் அறிவாளி அரியநேந்திரன்

Résultat de recherche d'images pour "அரியநேந்திரன்"மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த சில நாட்களில் நடைபெற்ற இந்து ஆலயங்கள் மீதான தாக்குதல்கள் நடை பெற்று வருகின்றன. குருக்கள் மடம் விஸ்ணு ஆலயம் மற்றும் வாகனேரி விநாயகர் ஆலயம் என்பன திட்டமிட்டு சேதப்படுத்தப்பட்டுள்ளன.மட்டக்களப்பில் இடம்பெற்றுவரும் அரசியல் பழிவாங்கல்களும் இந்த தாக்குதல்களும் இணைந்து மக்களை இந்த நல்லாட்சிமீது நம்பிக்கை இழக்க செய்துவருகின்றன. கடந்த ஜனாதிபதி தேர்தலில் நல்லாட்சிக்காக தமிழ் மக்களை வாக்களிக்குமாறு கூறி ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்தியவர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பினர். ஆனால் தமிழ் மக்களிடம் இவர்கள் விதைத்த கனவுகள் எல்லாம் கானல் நீராக போய்  விட்டன. கேவலம் தமது அரசியல் பழிவாங்கலை மட்டும் ரணில்-கூட்டமைப்பு அரசாங்கம் செய்ய முடிந்திருக்கிறது. கிழக்கின் முதல்கட்சியான தமிழ் மக்கள் விடுதலை புலிகளை அழித்தொழிக்க பகிரதபிரயத்தனம்  செய்ய மட்டுமே இந்த ஆட்சிமாற்றம் பயன்பட்டுள்ளது. இந்த லட்சணத்தில் மீண்டும் கிழக்கு பகுதியில் தமிழ் மக்களின் வழிபாட்டு இடங்கள் தாக்குதலுக்கு உள்ளாகி வருகின்றன. இதனை தடுக்கவோ இதன் மீதான நடவடிக்கைகளை மேற்கொள்ளவோ ஏன் ரணில்-கூட்டமைப்பு அரசாங்கத்தால் முடியாது? மாகாணத்தில் கள்ள ஆட்சியும் மத்தியில் நல்லாட்சியும் செய்யும் கூட்டமைப்பினரே மக்களுக்கு பதில் கூற  கடமைப்பட்டவர்களாகும். நல்லாட்சி அரசாங்கம் என்கின்ற மாயையை  மக்களிடம் எடுத்து சென்ற இந்த கூட்டமைப்பினர்தான் இதற்கு பொறுப்பு சொல்ல வேண்டும்.
அதை விடுத்து நல்லாட்சி ஒன்று நடப்பதாக தெரிவிக்கப்படும் இக் கால கட்டத்திலும் இந்து ஆலயங்களுக்கு காவலாளிகள் தேவைப்படுவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா. அரியனேந்திரன் நீலிகண்ணீர்  வடிக்கின்றார். இது கண் கெட்ட பிற சூரிய நமஸ்காரம் செய்யும் அறிவாளி அரியநேந்திரன் அவர்களே! 0 commentaires :

Post a Comment