11/20/2015

மாலியில் ஆயுதாரிகளினால் 170 பணயக்கைதிகள் தடுத்து வைப்பு

 Résultat de recherche d'images pour "mali"மாலித் தலைநகர் பமகோவில் உள்ள ஐந்து நட்சத்திர ஹொட்டலொன்றை தாக்கிய ஆயுதாரிகள், அங்கு 170 பேரைப் பணயக்கைதிகளாக பிடித்து வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 
அல்லாஹூ அக்பர் என்று கத்தியபடி, தலைநகரின் மத்தியில் அமைந்துள்ள ரேஸிடோர் ஹொட்டல் குழுமத்தினால் நிர்வகிக்கப்படும் ரடிஸ்ஸன் ஹொட்டலின் உட்பகுதியில் தாக்குதலாளிகள் சரமாரியான துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஏழாவது மாடியிலேயே அனைத்தும் இடம்பெறுவதாகவும், விறாந்தைப் பகுதியில் ஜிகாதிகள் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்வதாகவும் பெயர் குறிப்பிட விரும்பாத பாதுகாப்பு அதிகாரியொருவர் தெரிவித்தார்.
மாலித் துருப்புக்களும் ஐக்கிய நாடுகள் சபையின் துருப்புக்களும் பாதுகாப்பு வலயமொன்றை அமைத்துள்ள நிலையில், 190 அறைகளைக் கொண்ட மேற்படி ஹொட்டலின் உட்புறத்தில் இருந்து தானியங்கி துப்பாக்கி பிரயோகத்தை கேட்கக்கூடியதாக இருக்கின்றது எனத் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, மூன்று மணித்தியாலங்களுக்கு முன்பதாகவே தாக்குதலாளிகள் தென்பட்டதாகவும், காலையிலேயே ஹொட்டலை வந்தடைந்த பத்து வரையான துப்பாக்கிதாரிகள் ஹொட்டலின் பாதுகாவலர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதாக மேற்படி ஹொட்டல் குழும வர்த்தகத்தின் நிர்வாகி கர்பா கொணட்டே தெரிவித்தார். 
தங்களுடைய தகவல்களின் படி, 140 விருந்தினர்களையும், 30 பணியாளர்களையும், இரண்டு நபர்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளதாக ரேஸிடோர் ஹொட்டல் குழுமம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்படுகிறது.  
இதேவேளை, ஐக்கிய நாடுகள் சபையின் அதிகாரிகள், மேற்படி ஹொட்டலில் நிகழ்வொன்றைக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. 
இது தவிர, மேற்படி விருந்தினர்களில் ஒருவராக, ஆபிரிக்காவின் மிகப் பெரிய செல்வந்தரான நைஜீரியாவின் அலிக்கோ டங்கொட்டேயும் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.   

0 commentaires :

Post a Comment