11/08/2015

வாசிப்பு மனநிலை விவாதம் 19வது தொடர்-பாரிஸ்

வாசிப்பு மனநிலை விவாதம் நாளை தனது 19வது தொடரை நடத்துகின்றது. பாரிஸ் வாழ் இலக்கிய ஆர்வலர்கள் இருமாதங்களுக்கு ஒருமுறை சந்தித்து அவ்வப்போது வெளிவரும் நூல்களை வாசித்து கருத்துக்களையும் விமர்சனங்களையும் பகிர்ந்துகொள்ளும் நிகழ்விதுவாகும்.

நாளை இடம்பெறும் நிகழ்வில் அண்மையில் காலமான கவிஞர் திருமாவளவனின் நினைவுகளோடு  "கிராமியம் -கல்வி-மேம்பாடு" என்னும் நூலும் "சென்றிடுவீர் எட்டுத்திக்கும்" என்னும் சிறுகதை தொகுப்பும் பற்றிய உரையாடல்கள் இடம்பெறவுள்ளன.0 commentaires :

Post a Comment