உண்மைகள்

மறைக்கப்படும் மறுக்கப்படும் செய்திகளுக்காக...

Get The Latest News

Sign up to receive latest news

11/20/2015

மட்/ கல்குடா /விநாயகபுரம் விநாயகர் வித்தியாலயத்திற்கு சுமார் ஒன்றரை லட்ச ரூபாய் பெறுமதியான பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.*கிழக்கு மாகாண கல்வி அபிவிருத்தியில் கூடுதல் அக்கறையுடன் செயற்பட்டு வரும் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் கிழக்கு மாகாணத்தின் முதல் முதலமைச்சருமான கௌரவ.சி.சந்திரகாந்தன் அவர்களது பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ் பல்வேறு பட்ட கல்விசார் அபிவிருத்தி பணிகள் பல பாடசாலைகளுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. அவ்வகையில் இன்று கல்குடா வலயத்திற்கு உட்பட்ட பாடசாலையான விநாயகபுரம் விநாயகர் வித்தியாலயத்திற்கு சுமார் ஒன்றரை லட்ச ரூபாய் பெறுமதியான பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.
 
போட்டோகொப்பி இயந்திரம் மற்றும் ஒலிபெருக்கி சாதனங்களுக்குரிய இலத்திரனியல் கருவிகள் போன்றன இவ்வாறு வழங்கி வைக்கப்பட்டன. சி.சந்திரகாந்தன் அவர்களின் நிதி ஒதுக்கீட்டில் கொள்வனவு செய்யப்பட்ட இவ்உபகரணப் பொருட்களை தமிழ்மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் உபதலைவரும், கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான கௌரவ. நாகலிங்கம் திரவியம் அவர்கள் இன்று பாடசாலை அதிபரிடம் கையளித்தார்.
இந்நிகழ்வில் பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், பாடசாலை நலன்விரும்பிகள் போன்றோர் பங்குபற்றினர். பொருட்களைப் பெற்றுக்கொண்ட அதிபர் பாடசாலை மாணவர்களின் சார்பாகவும், கிராமப் பொது மக்களின் சார்பாகவும் தனது நன்றியறிதலை கௌரவ மாகாண சபை உறுப்பினர் திரு.நா.திரவியம் அவர்களிடம் தெரிவித்தார்

0 commentaires :

Post a Comment