உண்மைகள்

மறைக்கப்படும் மறுக்கப்படும் செய்திகளுக்காக...

Get The Latest News

Sign up to receive latest news

11/24/2015

கிழக்கு மாகாண சபையின் அமர்வு அமளி துமளி

Afficher l'image d'origineகிழக்கு மாகாண சபை அமர்வில் ஏற்பட்ட அமளி துமளியினால் சபை அமர்வு அரை மணி நேரம்  ஒத்தி வைக்கப்பட்டது. கிழக்கு மாகாண சபை அமர்வு இன்று செவ்வாய்க்கிழமை காலை பிரதி தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார் தலைமையில் கூடியது. இதன்போது,கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டிருந்த பொலிஸ் பாதுகாப்பு அகற்றப்பட்டமை தொடர்பில் முன்வைக்கப்பட்ட அவசர பிரேரணை தொடர்பில் சபையின் எதிர்க்கட்சி உறுப்பினர் மஞ்சுள பெர்ணான்டோ உரையாற்றிக் கொண்டிருந்தபோது சபையில் அமளி துமளி ஏற்பட்டது. இதன்போது, பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படல் வேண்டும் என தெரிவித்து சபை நடவடிக்கைகளை பகிஸ்கரித்து சபையின் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சபையை விட்டு வெளியேறினர். இதையடுத்து, கிழக்கு மாகாண முதலமைச்சரின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற சமரசக் கூட்டத்தைத் தொடர்ந்து,  கிழக்கு மாகாண சபையின் அமர்வு மீண்டும் கூடப்பட்டது.

0 commentaires :

Post a Comment